ரஜினி குறித்து நடிகை ராதிகா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80, 90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ராதிகா . இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் தொடங்கி தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.

'ராதிகா ராடான் டிவி' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான சீரியல்களை ராதிகா தயாரித்து இருக்கிறார். அதோடு பல மெகாஹிட் சிரியல்களையும் தயாரித்த ராதிகா “சித்தி” போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார். சன் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, வாணி ராணி, செல்வி, அரசி, சித்தி என பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார் ராதிகா.
அந்த வகையில் கடைசியாக ராதிகாவின் நடிப்பில் வெளிவந்த சித்தி 2 சீரியல் வெற்றிகரமாக முடிவடைந்தது.
ராதிகா திரைப்பயணம்:
இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம். வெள்ளித்திரையில் சாதித்தவர்களால் சின்னத்திரையிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் ராதிகா சரத்குமார். அதுமட்டுமில்லாமல் இவர் ரடான் மீடியா ஒர்க்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் படங்களில் பிஸியாகவும் நடித்து கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் குறித்து நடிகை ராதிகா கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி-ராதிகா படங்கள்:
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் உடன் ஜோடியாக அதிகம் நடித்த நடிகைகளில் ஒருவர் ராதிகாவும் தான். நல்லவனுக்கு நல்லவன், மூன்று முகம், ஊர்காவலன், போக்கிரி ராஜா, ரங்கா, நன்றி மீண்டும் வருக போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் இருவரும் ஜோடியாக இணைந்து நடித்திருக்கிறார்கள். இதனால இவர்கள் இருவருக்கும் இடையே நட்புறவு ஏற்பட்டிருக்கிறது.
ராதிகா பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் குறித்து ஒரு பேட்டியில் ராதிகா, ரஜினிகாந்த் ஒரு பங்க்ஷனுக்கு
வந்திருந்தார். அப்போது அவர் ரப்பர் செருப்பு தான் போட்டு வந்தார். அதை நான் பார்த்து விட்டேன். பின் நான், நீங்க பெரிய நடிகர்தானே, சூப்பர் ஸ்டார்னு எல்லாரும் சொல்றாங்கன்னு சொன்னேன். உடனே அவர், ஆமா ஆமா என்று சொன்னார். அப்புறம் நான், ஏன் இப்படி செருப்பு போட்டு வரிங்கன்னு கேட்டேன். அன்றில் இருந்து என்னை எங்கு பார்த்தாலும் முதலில் செருப்பை தான் ரஜினி பார்ப்பார்.

ரஜினி பற்றி சொன்னது:
அந்த பயம் அவருக்கு எப்போதுமே இருக்கு. கோச்சடையான் படத்தின் சூட்டிங்க்காக லண்டனுக்கு ரஜினி சென்றிருந்தார். அப்போது அவரிடம் நான், என்ன ரஜினி ஷூ போட்டு இருக்கீங்கன்னு கேட்டேன். உடனே ரஜினி, நீங்க வந்து இருக்கீங்க இல்ல. அதனால தான் கரெக்டா போட்டு இருக்கேன் என்று சொன்னதாக கூறியிருக்கிறார். இப்படி ரஜினிகாந்தே பயப்படும் ஒரு நடிகையாக ராதிகா இருக்கிறார். எங்கு பார்த்தாலும் இருவரும் கலப்பழக்கமாக சிரித்து பேசி கொள்வார்கள். பல வருடங்கள் இருவரின் நட்பும் நீடித்துக் கொண்டு வருகிறது.






