தமிழ் சினிமாவில் 80, 90ஸ் கால கட்டத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ராதிகா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் முதல் தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.

ராதிகாவின் திரைப்பயணம்:
மேலும், சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார் ராதிகா. பிரபல சன் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, வாணி ராணி, செல்வி, அரசி, சித்தி என பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார் ராதிகா. அதுமட்டும் இல்லாமல் சீரியலை ராதிகா சரத்குமார் அவர்களே தயாரித்து வருகிறார். தற்போது ராதிகாவின் சித்தி 2 சீரியல் வெற்றிகரமாக ஒடி கொண்டு இருக்கிறது.

சின்னத்திரையில் ராதிகா:
இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம். வெள்ளித்திரையில் சாதித்தவர்களால் சின்னத்திரையிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் நடிகை ராதிகா சரத்குமார். தற்போது இவர் பல படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் ரடான் மீடியா ஒர்க்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகிறார். மேலும் நடிகை ராதிகா தற்போது இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகிக்கு பாகம் இரண்டில் நடித்து வருகிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
வைரல் வீடியோ :
இப்படி சினிமாவிலும் மிகவும் பிரபலமானவராக இருக்கும் ராதிகா தற்போது தன்னுடைய குடுப்பத்துடன் விடுமுறையை கொண்டாடி கொண்டிருக்கிறார். இந்நிலையில் விடுமுறையில் தன்னுடைய கணவர், மகள், பேரன்கள் என அனைவருடனும் நீச்சல் குளத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை ராதிகா மகள் வரலட்சிமி சரத்குமார் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிய நிலையில் இதே போன்று குடும்பத்துடன் எப்போதும் மகிச்சியாக இருக்க வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.






