திரைத்துறையில் நடிகைகளுக்கு நடக்கும் அவலங்கள் குறித்து ராதிகா அளித்திருக்கும் பேட்டி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது.

பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பின் கடந்த 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ராதிகா பேட்டி :
தற்போது இது குறித்து பிரபல நடிகை ராதிகா பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தப் பிரச்சனை மலையாள சினிமாவில் மட்டும் கிடையாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து இடத்திலும் உள்ளது. இந்த பிரச்சினைக்கு இதுவரை பெண்கள் தான் குரல் கொடுத்து கொண்டுக் இருக்கிறார்கள். ஆண் நடிகர்கள் யாரும் இது குறித்து வாய் திறக்கவே இல்லை. ஒருமுறை, மலையாள படம் ஒன்றின் படப்பின் போது, அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து கொண்டு போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அது குறித்து விசாரித்த போது, அவர்கள் கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்பது எனக்கு தெரிந்தது.
https://www.youtube.com/watch?v=DCKNC3xSl1s
சினிமாவே சிஸ்டமே சரியில்லை :
இதனால் நான் பயந்து போய் கேரவனில் உடைகளை மாற்றாமல் ஹோட்டல் அறைக்குச் சென்று உடை மாற்றினேன். அதன்பிறகு கேரவன் ஆட்களை அழைத்து செருப்பால் அடிப்பேன். கேரவனுக்குள் கேமரா வந்தால் அவ்வளவுதான் என்று சொன்னேன். அது எந்த படப்பிடிப்பு என்று நான் சொல்ல விரும்பவில்லை. அந்த நடிகை உடைமாற்றும் வீடியோ தற்போது இணையத்தில் பெயரோடு வருகிறது. இங்கு சினிமாவே சிஸ்டமே தவறாக இருக்கிறது. சினிமாவைப் பற்றி தானே தவறாக சொல்வது. நம்மைப் பார்த்து நாமே தித்திக் கொள்வதற்கு சமம் என்று கூறியுள்ளார்
சின்மயி குறித்து:
அதேபோல், பாடகி சின்மயி தனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்ததாக புகார் அளித்தார். அவர் சொல்வது உண்மையா இல்லையா என்று கூட தெரிந்து கொள்ளாமல் அவரை சமூக வலைத்தளத்தில் வசைப்பாடி அவருக்கு வேலை வாய்ப்பு போனது. யார் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள்? எந்தப் பெண் சொன்னாலும் ஏன் அந்தப் பெண்ணை யாரும் நம்புவதில்லை. சமீபத்தில், விஷால் இடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது யார் வேண்டுமானாலும் இப்படி புகார் அளிக்கலாம் என்று விஷால் பதில் சொல்கிறார்.
https://www.youtube.com/watch?v=oZN4LvlEkyo
விஷால் ஆம்பளைதானே:
இதையெல்லாம் ஒரு பதிலே கிடையாது. யூடியூபில் யாரோ ஒருவன் நடிகர்கள் இப்படி எல்லாம் இருந்தால்தான் முன்னுக்கு வர முடியும் என்று சொல்கிறான். நான் சொல்கிறேன் விஷாலுக்கு தைரியம் இருந்தால் அந்த நபரை போய் செருப்பால் அடிக்கட்டும். விஷால் பொதுச் செயலாளர் தானே, அவர் ஒரு ஆம்பளையாக இருந்தால் பொய் அடிக்கட்டும், நானும் தொடப்பம் எடுத்துக் கொண்டு கூட வரேன் என்று பேசியுள்ளார். மேலும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் சேர்ந்து எங்களிடம் வந்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். எல்லோரும் சேர்ந்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்வோம் என்று பேசியுள்ளார்.






