நயன்தாராவின் இரட்டை குழந்தைகளை பார்க்க வந்த ராதிகாவின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான்.
மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக ஹனி மூன் சென்று இருந்தனர். அதன் பின் இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இதுபற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார்கள்.
விக்னேஷ் சிவன்- நயன் இரட்டை குழந்தை:
இதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். ஆனால், பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். இது குறித்து கடந்த மாதம் முழுவதும் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. இதை DMS மருத்துவத் துறையினர் மூலம் 3 குழு வைத்து விசாரணை நடித்து இருந்தார்கள்.
வாடகைத் தாய் குழந்தை சர்ச்சை:
அதற்குப் பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் உரிய ஆதாரங்களை மருத்துவரிடம் சமர்ப்பித்து இருந்தார்கள். இதனை அடுத்து அவர்கள் கொடுத்த ஆதாரங்கள் சரியாக இருந்ததால் அவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் தொடரவில்லை. தற்போது இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. சமீபத்தில் தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தல தீபாவளி கொண்டாடியிருந்தனர். அந்த வீடியோக்களை எல்லாம் இணையத்தில் வைரலாக இருந்தது.
நயன் குழந்தைகளை பார்க்க சென்ற ராதிகா:
இந்த நிலையில் நடிகை நயன்தாராவை காண ராதிகா சென்றிருக்கும் தகவல் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை ராதிகா அவர்கள் நயன்தாராவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு அவருடைய இரட்டை குழந்தைகளை பார்த்து வாழ்த்து கூறியிருக்கிறார். பின் நயன்தாரா- விக்னேஷ் சிவன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ஒரு நல்ல டீயுடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மற்றும் அவர்கள் இரட்டை குழந்தைகளை சந்தித்தேன். அதில் மிகுந்த மகிழ்ச்சி என்று பதிவிட்டிருக்கிறார்.
ராதிகா திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ராதிகா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த லவ் டுடே படத்தில் ராதிகாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.