எனக்கு கொடுத்த ஆதரவை என் தம்பிக்கும் கொடுங்கள். தம்பியின் பிறந்தநாளுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த லாரன்ஸ்.

0
1021
ragava
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார் லாரன்ஸ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஆதரவற்ற குழந்தைகளுக்கும், உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். அதற்கென தனியாக ஒரு டிரஸ்ட் வைத்து நடத்தி வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

ஒரு பேய் படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ். மேலும், இவருக்கு எட்வின் என்ற ஒரு சகோதரரும் இருக்கிறார். இவர் காஞ்சனா படத்தில் ஒரு பாடலிலும் வந்திருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில் ராகவா லாரன்ஸை தொடர்ந்து அவரது சகோதரர் எட்வினும் சினிமாவில் ஹீரோவாக களமிறங்க இருப்பதாக ராகவா லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ஹாய், நண்பர்களே மற்றும் ரசிகர்களே. இன்று என்னுடைய சகோதரர்எட்வினின் பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு நான் ஏதாவது ஒரு சர்ப்ரைஸ் கொடுப்பேன். அதே போல இந்த ஆண்டும் அவருக்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் இருக்கிறது. அவருடைய கனவு ஒரு நல்ல நடிகராக வரவேண்டும் என்பதுதான். அவருக்கு ஒரு நல்ல கதையை கொடுக்க இத்தனை காலமாக காத்துக் கொண்டிருந்தோம். தற்போது அது நனவாகியுள்ளது.

Hi friends and fans, Today is my brother Elviin’s birthday. Every year I plan a surprise for him. Similarly, this year I…

Raghava Lawrence ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಜೂನ್ 20, 2020

அவர் நடிக்கும் அந்த படத்தினை ராகவேந்திரா ப்ரொடக்ஷன் தயாரிக்க இயக்குனர் எம் ராஜா இயக்குகிறார் பிரச்சனையை அடங்கிய பின்னர் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கும். என் சகோதரருக்கு உங்களின் வாழ்த்துக்களும் ஆதரவும் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

-விளம்பரம்-
Advertisement