ராகவா லாரன்ஸ் டிரஸ்டை சேர்ந்த 21 பேருக்கு கொரோனா. அதில் இத்தனை குழந்தைகளும் அடக்கம்.

0
949
Lawrance
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகராகவும், நடன இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார் ராகவா லாரன்ஸ். சினிமாவையும் தாண்டி இவர் தொண்டு நிறுவனத்தின் மூலம் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனால் இவருக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு ரசிகர்கள்உள்ளனர். மேலும், நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த முன்னணி நடிகரும் கொடுக்க முடியாத பெரிய தொகையை நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுக்க முன் வந்து உள்ளார். 3 கோடி ரூபாய் நிதியாக தருவதாக ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார்.

-விளம்பரம்-
jtrj

இதைத் தொடர்ந்து இவர் பல சினிமா கலைஞர்கள், துப்புரவு பணியாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு உதவிகளை செய்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் ஊரடங்கு பாதிப்பால் வேலை இல்லாமல் கஷ்டப்படும் அடித்தட்டு மக்களுக்கு கூட தன்னுடைய நண்பர்கள் மற்றும் குழுவினருடன் சேர்ந்து தினமும் உணவுகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டில் தங்கி இருக்கும் நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையும் பாருங்க : இணையத்தில் லீக்கான விஜய் சேதுபதியின் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில். அதிர்ச்சியில் படக்குழு.

- Advertisement -

தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகவா லாரன்ஸ் அவர்கள் அசோக் நகரில் டிரஸ்ட் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் பல குழந்தைகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்த டிரஸ்டின் மூலம் இவர் குழந்தைகளின் அறுவை சிகிச்சை உட்பட பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். இந்த ட்ரெஸ்ட்டில் தங்கியிருக்கும் 10 மாணவிகள், 5 மாணவர்கள், மூன்று பணியாளர்கள், 2 சமையல்காரர்கள் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரையும் தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தொடர்ந்து அந்த ட்ரஸில் இருக்கும் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கிறதா??? என சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து உள்ளார்கள். தற்போது இந்த தகவல் மக்கள் மத்தியிலும் சோசியல் மீடியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement