ஜெய்பீம் திரைப்படத்தின் நாயகன் ராஜகண்ணு மனைவி பார்வதி குடும்பத்தினருக்கு நடிகர் லாரன்ஸ் உதவி தொகை வழங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல படங்கள் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம். இந்த படத்தில் சந்துரு கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்து இருந்தார். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே பழங்குடியின மக்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது.
இதையும் பாருங்க : மன்சூர் அலிகான் அந்த பேட்டில பண்ணத பாத்து தான் அவர வச்சி ஒரு படம் எழுத்தனும்னு முடிவு பண்ணேன் – லோகேஷ் சொன்ன வீடியோ.
ஜெய் பீம் படம்:
மேலும், இந்தப்படம் வெளிவந்து மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்தை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். அதேசமயம் இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக வன்னிய சமூகத்தினர் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்கள். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இருந்தாலும், திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற ‘ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ திரைப்படத்தை முந்தி ‘ஜெய்பீம்’ சாதனை படைத்தது.
ஜெய் பீம் பெற்ற விருதுகள்:
ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதுக்கான போட்டியில் ஜெய் பீம் இடம் பெற்றிருந்தது. இப்படி ஜெய் பீம் பல விருதுகளை பெற்று இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த படம் வெளியான பின்னர் உண்மையான செங்கேணி , ராஜாகண்ணுவின் மனைவி பார்வதியை பலர் நேரில் சந்தித்து பேட்டி எடுத்து இருந்தார்கள். அதோடு பலரும் ராஜக்கண்ணு மனைவி பார்வதிக்கு உதவி செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் ஜெய் பீம் படத்தைப் பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் ராஜக்கண்ணு மனைவி பார்வதிக்கு தன்னுடைய சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக அறிவித்து இருந்தார்.
ராஜகண்ணு குடும்பத்துக்கு லாரன்ஸ் செய்தது:
ஆனால், தமிழக அரசு அவருக்கு வீடு கட்டி தர முன்வந்தது அதை தமிழக முதல்வரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதன் காரணமாக நடிகர் லாரன்ஸ் பார்வதிக்கு வீடு கட்டித்தர ஒதுக்கிய தொகையை அவருக்கும் அவருடைய வாரிசுகளுக்கும் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார். அதன்படி பார்வதி குடும்பத்தை அலுவலகத்திற்கு வரவழைத்து 5 லட்சம் தொகையை 4 பேருக்கும் பிரித்து வழங்கி இருக்கிறார் லாரன்ஸ். இதைத்தொடர்ந்து அவர்கள் குடும்பத்திற்கு உதவி கிடைக்க காரணமாக இருந்த ஜெய்பீம் படக்குழுவினருக்கும்,
லாரன்ஸ் செய்யும் உதவிகள்:
அதை கவனத்திற்கு கொண்டுவந்த பத்திரிகையாளர்களுக்கும் லாரன்ஸ் நன்றி தெரிவித்திருக்கிறார். இதுபோல் இன்னும் சிலருக்கு லாரன்ஸ் உதவி செய்திருக்கிறார். குறிப்பாக ஜல்லிக்கட்டு சமயத்தில் இறந்த சேலத்தை சேர்ந்த இளைஞன் குடும்பத்திற்கு இலவசமாக வீடு கட்டித் தந்து இருக்கிறார். அதேபோல் புதுக்கோட்டையில் பல ஆண்டுகளாக ஆதரவற்று இறந்தவர்களின் உடல்களை தன்னுடைய சொந்த செலவில் அடக்கம் செய்து வருகிறார் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது