அஜித் சார் அன்னிக்கி அப்படி சொல்லாம இருந்திருந்தா இன்னிக்கி நான் ஹீரோவா ஒக்காந்து பேசி இருக்கா மாட்டேன் – லாரன்ஸ் உருக்கம்.

0
731
- Advertisement -

அஜித்தால் தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று ராகவா லாரன்ஸ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் சந்திரமுகி 2. இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி. வாசு தான் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவருடன் ராதிகா, மகிமா,கங்கனா, லட்சுமி மேனன், வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

ஜிகர்தண்டா படம்:

இதனை அடுத்து தற்போது ராகவா லாரன்ஸ் அவர்கள் ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா இயக்கத்தில் வெளியாகியிருந்தது. அந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமிமேனன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்து இருக்கிறது.

-விளம்பரம்-

ஜிகர்தண்டா 2 படம்:

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இந்த இரண்டாம் பாகத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், ஷைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தினுடைய பிரமோஷன் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

ராகவா லாரன்ஸ் பேட்டி:

இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டார். அஜித் குறித்து ராகவா லாரன்ஸ் கூறியிருந்தது,நான் அஜித்தின் அமர்க்களம் படத்தில் வந்த மகா கணபதி பாடலின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானேன். இந்த பாடல் தான் எனக்கு பெரிய அளவு ரீச்சை கொடுத்தது. பரத்வாஜ் இசையில் இந்த பாடல் செம குத்து ஆக இருந்தது. எனக்கு ஆரம்பத்தில் அஜித் சாருடன் அதிகமாக பழக்கம் இல்லை.

அஜித் குறித்து சொன்னது:

அந்த பாடலில் முதலில் அஜித் சார் தான் ஆடுவதாக இருந்தது. ஆனால், கோரியோகிராபி நான் செய்வதை பார்த்து அந்த தம்பி நன்றாக ஆடுகிறார். அவரை ஆட சொல்லுங்கள் என்று வாய்ப்பு கொடுத்தார். அதனால் தான் நான் மகா கணபதி பாடல் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டேன். அப்போதிலிருந்து எனக்கு அஜித் சார் மீது நல்ல மரியாதை இருக்கிறது. அவருக்கு எப்போதும் என்னுடைய நெஞ்சில் தனி இடம் உண்டு என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். இதை அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்கள்.

Advertisement