இனிமே அடுத்த சூப்பர் ஸ்டார் யார்னு யாரவது கேட்டீங்க – மேடையில் ராகவா லாரன்ஸ் சொன்ன மாங்கா,தேங்கா கதை.

0
534
- Advertisement -

சந்திரமுகி 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ராகவா லாரன்ஸ், பி. வாசு கொடுத்திருக்கும் பதில் தான் இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “சந்திரமுகி” படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் வெளியான இந்த படம் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு மற்ற மொழிகளிலும் படு ஹிட்டானது. இயக்குனர் பி வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினியின் நண்பராக இளைய திலகம் பிரபுக்கு நடித்திருப்பார்.

-விளம்பரம்-

அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். சந்திரமுகியாக முக்கிய கதாபத்திரத்தில் நடித்த ஜோதிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டதோடு, இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இவர்களுடன் இந்த படத்தில் நயன்தாரா, வடிவேல் ,நாசர், கே ஆர் விஜயா என பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை சிவாஜி புரொடக்சன் இந்த படத்தை தயாரித்து இருந்தது. மேலும், முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது.

- Advertisement -

சந்திரமுகி படம்:

சந்திரமுகி 2 படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் மூலம் சுபாஷ் சந்திரன் அவர்கள் தயாரிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு தான் சந்திரமுகி 2 இயக்குகிறார். இந்த படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை போல இந்த படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்கிறார். இதில் ராகவா லாரான்ஸ் வேட்டையன் ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் கங்கனா ரனாவத், ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் இந்த மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

ட்ரைலர் வெளியீட்டு விழா :

சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் பி வாசு, ராகவா லாரன்ஸ், கங்கனா உட்பட பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது விழாவில் இயக்குனர் பி வாசு கூறியிருப்பது, சந்திரமுகி முதல் பாகம் வெளிவந்தபோது அந்த படம் எதைப் பற்றிய கதை என்று மக்களுக்கு எந்த ஒரு ஐடியாவும் கிடையாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தார்கள். அதனால் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

-விளம்பரம்-

பி.வாசு கொடுத்த விளக்கம்:

இரண்டாம் பாகம் அப்படி இருக்குமா? இப்படி இருக்குமா? என்று பல எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். அதனால் எதிர்பார்ப்பு இல்லாமல் வாருங்கள். கண்டிப்பாக படம் உங்களை திருப்திப்படுத்தும் சந்தோஷப்படுத்தும். ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் கலக்கி இருக்கிறார். தியேட்டரை விட்டு வெளியே வரும் மக்கள் முதலில் ராகவா லாரன்ஸ் நடிப்பை பார்த்துதான் பாராட்டுவார்கள். அதேபோல் சூப்பர் ஸ்டாரோட யாரையும் ஒப்பிடாதீங்க. விஜய், அஜித்ன்னு எல்லோருக்கும் அவங்கவங்க உழைப்புக்கு ஏற்ற இடத்தை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

பட்டம் குறித்து ராகவா சொன்னது:

பட்டம் எல்லாம் மக்கள் கொடுப்பாங்க. அதனால் இந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து இதோட விட்டுவிடலாம் என்று கூறியவுடன் உடனே ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்னு விஜய் சார் கேட்டாரா? நான் எப்போ விஜய் சாரை பார்த்தாலும் தலைவர் எப்படி இருக்காரு? என்றுதான் அவர் கேட்பார். அதே மாதிரி பீஸ்ட் பரவாயில்லைன்னு சொன்னேன். அதுக்கு ரஜினி சார், இல்லப்பா கலெக்ஷன் எல்லாம் செமையா இருக்குதுன்னு சன் பிக்சர்ஸ் சொன்னாங்கன்னு சொன்னாரு. இதுதான் அவர்கள். தேங்காய் மரம் தேங்காய் தான் காய்க்கும், மாமரம் மாங்காய் தான் காய்க்கும் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement