பல ஆண்டு கழித்து சமூக சேவைக்காக லாரன்சுக்கு கிடைத்த கௌரவ – அதையும் அம்மா கையால் வாங்க வைத்து அழகு பார்த்த தருணம்.

0
628
raghavalawrence
- Advertisement -

சமூக சேவைக்காக நடிகர் ராகவா லாரன்ஸுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். பின் இவர் மிக பிரபலமான நடன இயக்குனர் ஆனார். அதற்கு பிறகு ராகவா லாரன்ஸ் நடிகராக கலக்கி கொண்டு வருகிறார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் லாரன்ஸ் என்று சொன்னாலே காஞ்சனா படம் தான் அனைவர்க்கும் நினைவிற்கு வரும்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கு நகைச்சுவை வகையில் பேய் படங்களை தந்தவர். முனி,காஞ்சனா 1,2,3 என்ற வரிசையாக படங்களை கொடுத்து இருக்கிறார். தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் ருத்திரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் ருத்ரன் படத்தின் வேலைகளை லாரன்ஸ் கிட்டத்தட்ட முடித்துவிட்டார். ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாகும் இந்தப் படத்தில், ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். அதன் பின் ராகவா லாரன்ஸ் அவர்கள் ‘துர்கா’ என்ற பேய் படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : சுதப்பிய திருமண Plan, பறிபோன பல கோடி பணம் – திருமண புகைப்படங்களை ஒரு மாதம் கழித்து வெளியிட்ட விக்னேஷ் சிவன். அதுக்கு காரணம் இதான்.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் படங்கள்:

இந்த புதிய படத்தின் போஸ்டர்கள் எல்லாம் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. இதற்கு சிலர் விமர்சித்து இருந்தாலும் சிலர் நல்ல விதமாக கமெண்டுகளை போட்டு இருந்தார்கள். ராகவா லாரன்சின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இதனை தொடர்ந்து இவர் 17 வருடங்கள் கழித்து உருவாகும் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி. வாசு தான் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இவருடன் படத்தில் வடிவேலு நடிக்கிறார்.

-விளம்பரம்-

லாரன்ஸின் சமூக சேவைகள்:

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு எம் எம் கீரவாணி இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். அடுத்ததாக கொடி புகழ் துரை செந்தில் குமார் இயக்கும் அதிகாரம் படத்திலும் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதையை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றி மாறன் எழுதி இருக்கிறார். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பல சமூக சேவைகளை செய்து கொண்டு இருக்கிறார்.

லாரன்சுக்கு கிடைத்த பட்டம்:

சினிமாவையும் தாண்டி தொண்டு நிறுவனத்தின் மூலம் நடிகர் லாரன்ஸ் அவர்கள் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறார். இதனால் இவருக்கு ஒன்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் கூட ஜெய்பீம் படத்தின் உண்மையான நாயகி பார்வதிக்கு இவர் பண உதவி செய்து இருந்தார். இந்த நிலையில் இவரின் சமூக சேவையை பாராட்டி இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதாவது, சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் சமூக சேவைக்கான டாக்டர் பட்டத்தை லாரன்சுக்கு வழங்கியிருக்கிறது.

விருது குறித்து ராகவா லாரன்ஸ் சொன்னது:

இந்த நிகழ்ச்சியில் லாரன்ஸ் சார்பில் அவருடைய தாயார் கண்மணி அந்த டாக்டர் பட்டத்தை பெற்று இருக்கிறார். மேலும், இந்த செய்தியை லாரன்ஸ் ட்வ்ட்டரில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் பெற்றது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இந்த விருதை எனக்கு வழங்கிய சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சிலுக்கு மனமார்ந்த நன்றி. இது எனக்கு சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால், என் சார்பாக என் அம்மா இந்த விருதைப் பெற்றிருக்கிறார் என்று கூறியிருக்கிறார். இதற்கு பலரும் லாரன்சுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement