உங்கள பாக்க வர சொல்ல எதுவும் வாங்கிட்டு வரல, அதனல இத வச்சிகோங்க – பார்வதிக்கு பாரி வள்ளலாய் மாறிய லாரன்ஸ்.

0
845
lawrance
- Advertisement -

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றது. இந்த படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கையும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியையும் வெளிச்சம் போட்டு காட்டிய படம் தான் ஜெய் பீம். மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மக்களின் பாராட்டுகளை பெற்றனர்.

-விளம்பரம்-

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் இந்த படம் குறித்து எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இதனால் இந்த படத்தை கண்டித்து ஒரு சில சமூகத்தினர் சோசியல் மீடியாவில் வன்மையாக கண்டித்தும், போராட்டங்கள் நடத்தியும் இருந்தனர். அதிலும் சிலர் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக படத்தில் வந்திருப்பதாகச் சொல்லி சூர்யா மீதும் இயக்குனர் மீதும் கண்டனம் தெரிவித்தும் அவர்களுக்கு எதிராக கோஷங்கள் இட்டும் வருகின்றனர்.

இதையும் பாருங்க : பாரதி கண்ணம்மா வெண்பாவிற்கு குழந்தை பிறந்தது – வித்யாசமான புகைப்படத்தின் மூலம் அவரே வெளியிட்ட பதிவு.

- Advertisement -

இந்த படம் வெளியான பின்னர் உண்மையான செங்கேணி , ராஜாகண்ணுவின் மனைவி பார்வதியை பலர் நேரில் சந்தித்து பேட்டி எடுத்து வந்தனர். அந்த வகையில் பிரபல யூடுயூபர்களான வலைபேச்சு குழு பார்வதியை நேரில் சந்தித்து பேட்டி எடுத்ததோடு அவர்களுக்கு ஒரு தங்க சங்கிலியையும் பரிசளித்தனர். மேலும், இந்த வீடியோவை பார்த்து அவரின் உண்மையான வறுமை நிலையை கண்டு நடிகர் லாரன்ஸ், தன் சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக கூறி இருந்தார்.

அவரை தொடர்ந்து நடிகர் சூர்யா, பார்வதியின் வங்கி கணக்கில் 10 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு அதில் இருந்து வரும் வட்டி அவரின் வாழ்வாதாரத்திற்கு கொடுக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் பார்வதியை அவரது வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்த லாரன்ஸ், அவருக்கு வீடு கட்டி தருவதாக அவரிடம் வாக்கு கொடுத்தார்.

-விளம்பரம்-

பார்வதியை பார்த்தால் தன் பாட்டியை பார்ப்பது போல் இருக்கிறது என்று அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். அதே போல பார்வதியை நேரில் சந்திக்க சென்ற போது எதுவும் வாங்கி வாரவில்லை என்று வருத்தப்பட்ட லாரன்ஸ் உடனே தன் செக் புக்கை எடுத்து 1 லட்ச ரூபாய் செக் போட்டு கொடுத்துள்ளார்.

Advertisement