தமிழ் சினிமாவில் நடிகராகவும், நடன இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் லாரன்ஸ். சினிமாவையும் தாண்டி தொண்டு நிறுவனத்தின் மூலம் நடிகர் லாரன்ஸ் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார். இதனால் இவருக்கு பல்வேறு ரசிகர்களும் இருந்து வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாகவே நடிகர் லாரன்ஸ் சீமான் மற்றும் கமல் ரசிகர்களின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளார். இதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் நடைபெற்ற தர்பார் இசை வெளியீட்டு விழாவில் லாரன்ஸ் பேசிய பேச்சுக்கள் தான் காரணம்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து உள்ளார். மேலும், ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்து உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட லாரன்ஸ் மேடையில் பேசும்போது, என்னுடைய தலைவருக்கு பணம், புகழ் எல்லாம் தேவையில்லை. அப்படி இல்லாத மனிதனாக வாழ்வதனால் தான் இந்திய நாட்டின் பிரதமர் மோடியே அவரை நேரில் வந்து சந்தித்து செல்கிறார். என் தலைவர் படத்தின் பப்ளிசிட்டிக்காக பேசவில்லை. உண்மைய சொல்லனும்னா பப்ளிசிட்டி பெயர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதோடு தன் தலைவனைப் பற்றி தப்பா ஏதாவது பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று சீமானை மறைமுகமாக தாக்கி பேசினார்.
இதையும் பாருங்க : இரவு பார்ட்டி, கையில் சரக்கு கிளாசுடன் மாளவிகா. செம மப்பா என்று கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.
மேலும், கமல் குறித்து பேசிய லாரன்ஸ், நான் சிறுவயதில் இருக்கும் போது கமல் போஸ்டருக்கு சாணி பூச்சி எல்லாம் இருக்கேன். அப்ப எனக்கு விவரம் தெரியாது. என் தலைவர் மேலே இருக்கிற பிரியத்தனால் தான் நான் செய்தேன். ஆனால், கமல், ரஜினி இவ்வளவு ஒண்ணா இருப்பாங்கனு எனக்கு தெரியாது. அதற்கு பிறகு தான் எனக்கு புரிந்தது. என்னுடைய தலைவர் அதிசயம், அற்புதம் நடக்கும் என சொன்னது அனைவருக்கும் பெரிய விஷயமா நினைக்கிறாங்க. ஆனால், அற்புதம், அதிசயத்திற்கு மறுபெயரே என்னுடைய தலைவர் தான் என்று பேசி இருந்தார். நடிகர் லாரன்ஸ் கமல் குறித்து பேசிய இந்த விஷயம், கமல் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகர் லாரன்ஸ் சமீபத்தில் கமலை நேரில் சந்தித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் தனது முகநூல் பக்கத்தில், எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமிளித்துள்ளேன். இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நான் நேரில் சந்தித்து விளக்கமளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியினையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.