கமல் சார் போஸ்டரில் சாணி அடிப்பேன். தர்பார் இசை வெளியீட்டில் சர்ச்சையை கிளப்பிய நடிகர்.

0
4926
darbar
- Advertisement -

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “தர்பார்” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசிய பேச்சு ரசிகர் மத்தியில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து உள்ளார். மேலும், ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்து உள்ளார். ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். மேலும், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

-விளம்பரம்-
Image

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘சும்மா கிழி சிங்கிள் டிராக்’ பாடல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், இந்தப் பாடல் ஐயப்பா சாமி பாடலின் டியூணிலிருந்து எடுக்கப்பட்டது என பல விமர்சனங்களை தெரிவித்து வந்தார்கள் நெட்டிசன்கள். இருந்தாலும் இந்த பாடல் வேற லெவல்ல யூடியூபில் தெறிக்க விட்டது. இதனை தொடர்ந்து தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், அவர் மனைவி லதா, நடிகர் ராகவா லாரன்ஸ், சந்தோஷ் சிவன். எ.ஆர்.முருகதாஸ் உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்றார்கள்.

ஆனால், வழக்கம் போல நயன்தாரா இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. ராகவா லாரன்ஸ் அவர்கள் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். அவருடைய படத்திற்கு பால் அபிஷேகம், பூஜை என பல்வேறு விஷயங்களை செய்பவர். அந்த அளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மீது அதிக பற்று உள்ளவர். மேலும், தர்பார் பட இசை வெளியீட்டு விழாவில் நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் பேசியது, என்னுடைய தலைவருக்கு பணம், புகழ் எல்லாம் தேவையில்லை. அப்படி இல்லாத மனிதனாக வாழ்வதனால் தான் இந்திய நாட்டின் பிரதமர் மோடியே அவரை நேரில் வந்து சந்தித்து செல்கிறார். என் தலைவர் படத்தின் பப்ளிசிட்டிக்காக பேசவில்லை. உண்மைய சொல்லனும்னா பப்ளிசிட்டி பெயர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதோடு தன் தலைவனைப் பற்றி தப்பா ஏதாவது பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்.

-விளம்பரம்-

அரசியலை நாகரீகமாக பேசுங்க. அதோடு நான் சிறுவயதில் இருக்கும் போது கமல் போஸ்டருக்கு சாணி பூச்சி எல்லாம் இருக்கேன். அப்ப எனக்கு விவரம் தெரியாது. என் தலைவர் மேலே இருக்கிற பிரியத்தனால் தான் நான் செய்தேன். ஆனால், கமல், ரஜினி இவ்வளவு ஒண்ணா இருப்பாங்கனு எனக்கு தெரியாது. அதற்கு பிறகு தான் எனக்கு புரிந்தது. என்னுடைய தலைவர் அதிசயம், அற்புதம் நடக்கும் என சொன்னது அனைவருக்கும் பெரிய விஷயமா நினைக்கிறாங்க. ஆனால், அற்புதம், அதிசயத்திற்கு மறுபெயரே என்னுடைய தலைவர் தான் என்று ரஜினிகாந்தை பற்றி பல்வேறு விஷயங்களை பேசினார். ராகவா லாரன்ஸின் இந்த ஆவேச பேச்சை கேட்டு ரசிகர்கள் எல்லாரும் பயங்கரம் கரகோசம் செய்து ஆரவாரம் செய்து உள்ளார்கள்.

இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் தமிழ் சினிமாத் துறைக்கு ஒரு பெரிய தூண்கள். அவர்கள் இரண்டு பேருமே நீண்டகால நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லலாம். மேலும், 35 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இரண்டு பேரும் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்று தகவல் வந்துள்ளது. இது வதந்தி என்றும் ஒரு பக்கம் கூறுகிறார்கள். இதனால் ரசிகர்கள் எல்லோரும் பயங்கர குஷியில் உள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

Advertisement