மாற்றுத்திறனாளியின் கனவு. விஜய்யின் தங்க குணம். நண்பன் விஜய்க்கு நன்றி என்று தெரிவித்த லாரன்ஸ்.

0
3481
Vijay
- Advertisement -

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். ‘சர்கார்’ படத்துக்கு பிறகு நடிகர் ‘தளபதி’ விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய ‘பிகில்’ என்ற திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்து மாஸ் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து நடிகர் ‘தளபதி’ விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் தான் ‘மாஸ்டர்’. இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குநர் ரொம்பவும் ஸ்பெஷல். ஆம், ‘மாநகரம்’ என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர்.

-விளம்பரம்-

இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.சமீபத்தில், இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷன் நடைபெற்றது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’ என்ற பாடலை மாற்றுத்திறனாளி ஒருவர் வாசிக்கும் வீடியோ பதிவை லாரன்ஸ் பகிர்ந்திருந்தார்.

- Advertisement -

மேலும், அந்த பதிவில் விஜய் மற்றும் அனிருததை டேக் செய்திருந்த லாரன்ஸ், வீடியோவில் இருக்கும் நபர் தன்னுடைய குழுவில் தான் இருக்கிறார் என்றும், அவர் தனது காஞ்சனா படத்தில் நடித்துள்ளார் என்றும், அவருக்கும் அனிருத்தின் இந்த பாட்டை விஜய்யின் முன்னாள் வாசிக்க வேண்டும் என்பது தான் ஆசை. இந்த வீடியோவை தயவு செய்து பாருங்க என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக நிலையில் அந்த மாற்றுத்திறனாளியின் ஆசையை விஜய் நிறைவேற்றுவதாக லாரன்ஸின் கூறியுள்ளாராம். இதுகுறித்து அன்னையர் தினமான இன்று பதிவிட்டுள்ள லாரன்ஸ், தான்சேன் குறித்து பதிவிட்டு அனிருத் மற்றும் நண்பன் விஜய்க்கும் நான் வேண்டுகோள் வைத்ததை அடுத்து நேற்றிரவு, நண்பன் விஜய்யிடம் பேசினேன். லாக்டவுன் முடிந்ததும் அந்த இளைஞரை அழைத்து வந்து வாசித்துக் காட்ட சொன்னார். அனிருத்தும் வாய்ப்புக் கொடுப்பதாகக் கூறியுள்ளார். அந்த இளைஞரின் கனவு நனவாக காரணமாக இருக்கும் நண்பன் விஜய்க்கும் அனிருத்துக்கும் பெரிய நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement