ஏ ஆர் ரகுமான் பெயரை பயன்படுத்தி பெண்களுக்கு வலை விரித்தார்கள்- ஏ ஆர் ரகுமானின் அக்கா ரெஹெனா

0
367
Rahaina

பின்னணி பாடகி சின்மயி மற்றும் வைரமுத்து #metoo  விவகாரம் தான் தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. பாடகி சின்மயி, வைரமுத்து மீது குற்றச்சாட்டை வைத்த பின்னர் பல்வேறு நடிகைககளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூறி வருவதுடன் சின்மயிக்கு ஆதரவாகவும் இருந்து வருகின்றனர்.

A R Raihanah

இருப்பினும் ஒரு சில தரப்பினர் வைரமுத்து மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டுக்கு பாடகி சின்மயி முன்னுக்கு பின்னான கருத்துக்களை கூறிவருகிறார் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சின்மயி மற்றும் வைரமுத்துவுடன் பணியாற்றிய பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் சகோதரி ரெஹெனா சின்மயிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

ஏ ஆர் ரகுமான், வைரமுத்து எழுதி கொடுத்த பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதே போல பாடகி சின்மையும், ஏ ஆர் ரகுமான் இசையில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற் ரெஹெனா சின்மயி குறித்து பேசுகையில், நான் சில ஆண்டுகளுக்கு முன்பே வைரமுத்து மீது பாலியல் புகார் எழுந்துள்ளதை நான் கேள்விபட்டுள்ளேன்.

இந்த சம்பவத்தை பற்றி ரகுமான் கேள்விபட்டபோது ‘இது உண்மையா ‘ என்று என்னிடம் கேட்டார். பல்வேறு பாலியல் தொல்லைகளில் ரகுமானின் பெயரை பயன்படுத்தி பெண்களுக்கு வலை விதித்தார்கள். நான் சின்மயி, வைரமுத்து மீது குற்றசாட்டை வைத்துள்ளதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இத்தனை ஆண்டுகள் அவரும் அவரது அம்மாவும் பயந்து போய் இந்த விடயத்தை வெளியில் சொல்லாமல் இருந்தனர் என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவர்கள் பயந்தவர்கள் அல்ல ஒருமுறை நாங்கள் இசை கச்சேரி நடத்திய போது சின்மயி அம்மா போன் செய்து, என் மகள் பெயரை போட்டு தான் இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டினாய். அவள் பெயரை வைத்து நீங்கள் கூட்டத்தை கூட்டி கச்சேரி நடத்துகிறீர்கள் என்று கடுமையாக பேசினாரர். ரகுமானின் தங்கை என்று பாராமல் என்னிடமே அப்படி பேசியவர்கள் எதற்கு வைரமுத்துவுக்கு பயப்பட வேண்டும் என்று புரியவில்லை என்று கூறியுள்ளார் ரெஹெனா.