திடீரென்று அன்பே சிவம் சீரியலில் இருந்து விலகிய நடிகை – அட கொடுமையே இப்போ தான ரீ-என்ட்ரி கொடுத்தாங்க.

0
689
anbesivam
- Advertisement -

சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்ஷா ஹோலா. இவர் பெங்களூரு கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் கன்னட மொழி படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கன்னட மொழியில் வந்த பல சூப்பர் ஹிட் சீரியல்களிலும் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த நாம் இருவர் நமக்கு இருவர் முதல் சீசன் மூலம் தமிழ் சின்ன திரைக்கு அறிமுகமானார் நடிகை ரக்ஷா ஹோலா. இந்த சீரியல் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், கொரோனா காலத்தினால் இவரால் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்பதை இவரே அறிவித்திருந்தார். பின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் தொடங்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

அன்பே சிவம் சீரியல் கதை:

இவர் கடந்த ஆண்டில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அன்பே சிவம் சீரியலில் லீட் ரோலில் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒளிபரப்பான தொடர் அன்பேசிவம். விவாகரத்து பெற்ற பெற்றோரை குழந்தைகளின் அன்பு எப்படி சேர்த்து வைக்கிறது என்பது தான் கதை. இந்த சீரியலில் கதாநாயகியாக அன்பு செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரக்ஷா ஹாலா நடிக்கிறார்.

அன்பே சிவம் சீரியல் நடிகர்கள்:

நல்ல சிவம் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் ஸ்ரீ நடிக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி மற்றும் காற்றின் மொழி ஆகிய சீரியல்களில் லீட் ரோலில் நடித்திருந்தார். பின் அன்பே சிவம் கதையில் நல்லசிவம் ஒரு நேர்மையான வழக்கறிஞராக இருக்கிறார். அன்பு செல்வி பேஷன் டிசைனராக இருக்கிறார். தற்போது இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அன்பே சிவம் சீரியலில் இருந்து விலகிய ரக்ஷா:

இந்நிலையில் திடீரென்று இந்த சீரியலில் இருந்து ரக்ஷா ஹாலா விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாகவே சீரியல் இருந்து நடிகர் நடிகைகள், விலகுவது வழக்கமான ஒன்று. அதிலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து நடிகர்-நடிகைகள் காரணம் இன்றி, எந்த ஒரு அறிவிப்பும் இன்றி சீரியலில் இருந்து விலகி வருகிறார்கள். அதிலும் பல சூப்பர் ஹிட் சீரியல் கதாநாயகிகள் விலகி உள்ளார்கள். அந்த வரிசையில் தற்போது ரக்ஷா ஹாலா இணைந்து உள்ளார். வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் அன்பே சிவம் சீரியல் இருந்து தற்போது விலகி இருக்கிறார்.

வைரலாகும் பதிவு:

இதை ரசிகர் ஒருவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டு, இவர் இனிமேல் அன்பே சிவம் சீரியலில் இல்லை. ரொம்ப மிஸ் பண்ணுகிறோம் அக்கா என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது இவரின் பதிவும், புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஏன் சீரியல் இருந்து விலகி விட்டீர்கள்? என்ன காரணம்? பட வாய்ப்பு கிடைத்து விட்டதா? உங்களுக்கு பதில் யார் நடிக்கிறார்கள்? என்று பல்வேறு கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு அன்பே சிவம் சீரியல் குழு தரப்பிலும், ரக்ஷா ஹாலா தரப்பிலும் என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement