மெர்சல்’ விவகாரத்தில் மோடியை நேரடியாக விலாசும் ராகுல் காந்தி!

0
1576
modi - Rahul Gandhi
- Advertisement -

மெர்சல்’ விவகாரம் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ‘மெர்சல்’ திரைப்படத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
Rahul Gandhiதீபாவளி அன்று வெளியான ’மெர்சல்’ திரைப்படத்தில், ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் , மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த விவகாரம் இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பல்வேறு ஊடகங்களில் ’மெர்சல்’ குறித்து விவாதங்கள் நடைபெற்றன. நேற்று ட்விட்டரில் #MersalVsModi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆனது.

-விளம்பரம்-

இந்நிலையில் ‘மிஸ்டர் மோடி, திரைப்படம் என்பது தமிழ் கலாசாரம் மற்றும் மொழியின் பெருமையைப் பிரதிபலிப்பதாகும். தமிழர்களின் பெருமையை மதிப்பிழக்கச் செய்ய முயல வேண்டாம்’ என்று ட்வீட் செய்து, ‘மெர்சல்’ திரைப்படத்தை எதிர்க்கும் பா.ஜ.க-வினருக்கு, பதிலடிகொடுத்துள்ளார் ராகுல் காந்தி. மேலும், பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகக் குறிப்பிட்டு ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளதால், மெர்சல் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -
Advertisement