ராஜா ராணி செம்பவுடன் காதலா ! உண்மையை உடைத்த கார்த்திக் ! என்ன சொன்னார் தெரியுமா

0
1771
raja rani Karthik

விஜய் டீவி யில் தற்போது இளைஞர்களால் அதிகம் பார்க்கப்படும் காதல் சீரியல் தான் ராஜா-ராணி.இதில் கார்த்திக்- செண்பாவக ,சஞ்சீவ் மற்றும் மானசா நடித்து வருகிறார்கள்.இந்த தொடரில் இவர்கள் இருவருக்கும் சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு காதல் காட்சிகள் அதிகம் இடம்பெற்று வருகிறது.இதனால் இவர்கள் இருவரையும் இணைத்து பல கிசுகிசுக்கள் பரவிவந்த நிலையில் இவர்கள் இருவரும் காதாலித்து வருவதாக சில வதந்திகள் பரவிவருகிறது.

raja rani

ஆனால் நடிகை மானசா ஏற்கனவே மனாஸ் என்ற ஒருவரை காதலித்து வருகிறார் என்பதை பலரும் அறிவார்கள்.2009 இல் குளிர் என்ற படத்தில் நடித்திருந்த சஞ்சீவ் அதன் பின்னர் பல மலையாள படங்களில் நடித்துள்ளார்.நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது இந்த தொடரில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இதுகுறித்து பேட்டியளித்த ராஜா ராணி ஹீரோ சஞ்சீவ் “நாணும் செண்பாவும் நல்ல நண்பர்கள். காட்சிகள் தத்ரூவமாக இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் நெருக்கமாக நடிக்கிறோம். நாங்கள் காதலிக்கவில்லை அதனால் இது போன்ற வதந்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள்” என்று கூறியுள்ளார். ஆனால் எதிர்காலத்தில் பார்க்கலாம் எனவும் கூறியுள்ளார்.