தன் மகளின் திருமணத்தை நினைத்து கவலைப்பட்ட ராஜா ராணி 2 அர்ச்சனாவின் அம்மா – இதோ வீடியோ.

0
793
archana
- Advertisement -

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. சீரியல் என்றாலே ஹீரோ, ஹீரோயின்,வில்லி. சீரியலில் ஹீரோ- ஹீரோயினுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதே அளவுக்கு வில்லிக்கும் இருக்கிறது. ஹீரோ- ஹீரோயினுக்கு இணையாக வில்லி கதாபாத்திரம் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஹீரோயினை விட வில்லியின் இம்பாக்ட் தான் சீரியலில் பயங்கரமாக இருக்கும். அதிலும் சமீப காலமாக கதாநாயகிகளை விட வில்லிகள் தான் மக்கள் மத்தியில் அதிகம் இடம் படித்து வருகிறார்கள். அந்த வரிசையில் விஜய் டிவியில் மோசமான வில்லியாக திகழ்பவர்கள் ராஜா ராணி அர்ச்சனா, பாரதி கண்ணம்மா வெண்பா.

-விளம்பரம்-
ராஜா ராணி 2 அர்ச்சனா | Raja Rani Archana Real Teeths

இவர்களையெல்லாம் ரசிகர்கள் திட்டித்தீர்த்த நாளே இருக்கிறது. அந்த வகையில் ராஜா ராணி 2 சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் அர்ச்சனா. விஜய் டிவியில் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ராஜா ராணி 2 சீரியலும் ஒன்று. கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல்:

இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. தற்போது இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் உள்ளது. ஐபிஸ் ஆக வேண்டும் என லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை. இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். மேலும், இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார். முதல் பிரவீன் தொடர்ந்து இரண்டாவது சீசனையும் இவரே எடுத்து வருகிறார். இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடித்தார்.

Raja Rani Serial Actress Archana's With Her Sister

விஜய் டெலிவிசன் விருது வழங்கும் விழா:

மேலும், இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் Vj அர்ச்சனா நடித்து வருகிறார். இவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மொத்த குடும்பத்தையும் வீட்டில் இருந்துகொண்டே பழிவாங்கும் மோசமான மருமகள் தான் அர்ச்சனா. இவரை திட்டி தீர்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு வில்லியாக மிரட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் டெலிவிசன் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இதற்கான முன்னோட்டம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. அதற்கான புரோமமும் சோசியல் வெளியாகியுள்ளது. அதில் அர்ச்சனாவின் அம்மா பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

அர்ச்சனா அம்மாவின் எமோஷனல் பேச்சு:

விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் முன்னோட்டம் ப்ரோமோவில் அர்ச்சனா அம்மா கூறியிருப்பது, என் மகளை எல்லோரும் வீட்டில் திட்டுகிறார்கள். பரினாவுக்கு கூட கல்யாணம் ஆகி குழந்தையும் பிறந்து விட்டது. ஆனால், என் பொண்ணுக்கு இனிமே தான் எல்லாமே ஆகணும். அதாவது சீரியல் வில்லி என்பது வெறுப்பு நடிப்பு மட்டும் தான். வெளியில் அவர்களை பார்க்கும் போது இவ்வளவு வெறுப்புகளை கொட்டாதீர்கள். உங்களுக்காக தான் அவர்கள் அப்படி நடிக்கிறார்கள். என் மகளுக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டு பேசி இருந்தார்.

விஜே அர்ச்சனாவின் சின்னத்திரை பயணம்:

இப்படி அர்ச்சனா அம்மா பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சிறு வயது முதலே ஆங்கராக வேண்டும் என்று கனவுடன் இருந்தவர் விஜே அர்ச்சனா. ஆதித்யா தொலைக்காட்சியின் மூலம் தான் இவர் அறிமுகமானார். அதன் பின்பு இன்ஸ்டா மூலம் விஜய் டிவி வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், அதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நீயா நானா ஷோவில் அர்ச்சனா பங்கேற்பாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இருக்கிறார். அதன் பின்னர் இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். தற்போது ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக கலக்கி கொண்டு இருக்கிறார்.

Advertisement