ராஜா ராணி 2வில் இருந்து விலகுவதாக வீடியோ வெளியிட்ட ரியா – அப்போ ஆல்யாவே திரும்ப வரப் போறாங்களா ?

0
505
alya
- Advertisement -

சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். அதோடு இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இவர்களுடைய குழந்தையின் பெயர் அய்லா. பின் குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டுவந்தார்.

- Advertisement -

இரண்டாம் குழந்தையால் விலகிய ஆல்யா :

இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார். இப்படி இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்தாலும் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், விரைவில் ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். ஆல்யா விலகியதை தொடர்ந்து தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிரந்திர சந்தியா என்று சொன்ன ரியா :

முதல் குழந்தை பிறந்து சில மாதத்திலேயே ஆல்யா மானஸா ‘ராஜா ராணி’ தொடரில் நடிக்க வந்துவிட்டார். எனவே, இரண்டாம் முறையும் குழந்தை பிறந்தவுடன் மீண்டும் நடிக்க வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல சமீபத்தில் ரியாவின் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவர் ‘தயவு செஞ்சி temporaryனு சொல்லிருங்க, ஆல்யா தான் சரியா இருப்பாங்க’ என்று கமன்ட் செய்து இருந்தததற்கு தான் permanent ஆக சந்தியா ரோலில் நடிக்கப்போவதாக கூறி இருந்தார்.

-விளம்பரம்-

விலகிய ரியா :

இப்படி ஒரு இந்த தொடரில் இருந்து ரியா விலகுவதாக அறிவித்து இருந்தார். இதுகுறித்து அவர் பேசி இருக்கும் ரியா ‘ராஜா ராணி தொடரில் அடித்து ஒரு வருடங்கள் ஆகப் போகிறது இந்த வருட வருடத்தில் நான் எந்த ஒரு வீடியோவும் போடவில்லை ஆனால் இப்போது போடுகிறேன் ஏனென்றால் நான் இனி ராஜா ராணி 2 தொடரில் இல்லை இனி நான் சந்தியா இல்லை சந்தியாவாக வேறு ஒருவர் பண்ணப் போகிறார் அவருக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள்’ என்று கூறியுள்ளார். ரியா விலகியதால் அடுத்து யார் சந்தியாவாக நடிக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மீண்டும் வருவாரா ஆல்யா :

தற்போது ஆல்யா இனியா தொடரில் நடித்து வருவதால் ஆல்யா மானஸாவே மீண்டும் சந்தியாவாக நடிக்க வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஏற்கனவே இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவர், எப்போ நீங்க ராஜா ராணியில் வருவீர்கள், உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம் என்று கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த ஆல்யா, நான் ராஜா ராணியில் மீண்டும் வரப்போவது இல்லை. சந்தியா கதாபத்திரம் இனி நிரந்திரமாக புதிய நாயகி தான் நடிப்பார் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement