இந்த காரணத்தால் தான் சீரியல்ல இருந்து விலகிடீங்களா ? ரசிகர்கள் கேள்விக்கு ரியா கொடுத்த விளக்கம்.

0
617
riya
- Advertisement -

ராஜா ராணி தொடரில் இருந்து ஏன் விலகினீர்கள் என்று ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் முன்னாள் சந்தியாவாக நடித்த ரியா. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது ராஜா ராணி சீரியல் தான். இந்த சீரியல் ஏற்க்கனவே முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தொடர்ந்து விறுவிறுப்பாக செல்வத்தினால் டிஆர்பியிலும் முன்னிலை வகித்து வருகிறது.

-விளம்பரம்-

சீரியலின் கதை :

ராஜா ராணி சிரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கும் பெண் ஒருவர் இனிப்பு கடை நடத்தி வரும் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். இப்படி இருக்கையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய மனைவி ஐபிஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசையை கதாநாயகன் தெரிந்து கொள்கிறார். ஆனால் இந்த ஆசைக்கு எதிராக கதாநாயகனின் அம்மா இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இவரை மீறி தன்னுடைய கனவை கதாநாயகி நிறைவேற்றினாரா என்பதுதான் மீதி கதையாக இருக்கிறது.தற்போது ராஜா ராணி சீரியலில் கதாநாயகி சந்தியா பல தடைகளையும் மீறி ஐபிஎஸ் ட்ரைனிங் சென்று தன்னுடைய சொந்த ஊருக்கே போஸ்ட் வாங்கும் அளவிற்கு வந்துவிட்டார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தான் இந்த சீரியலில் சந்தியாவாக நடித்து வந்த ரியா விஸ்வநாதன் சீரியலில் இருந்து விலகினார்.

ரியா வெளியிட்ட வீடியோ :

அதனை உறுதி செய்யும் வகையில் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் நடிகை ரியா வீடியோ ஒன்றை போட்டிருந்தார்.அந்த வீடியோவில் சிரியலில் இருந்து விலகுவது குறித்து பேசி இருக்கும் ரியா ‘ராஜா ராணி தொடரில் அடித்து ஒரு வருடங்கள் ஆகப் போகிறது இந்த வருட வருடத்தில் நான் எந்த ஒரு வீடியோவும் போடவில்லை ஆனால் இப்போது போடுகிறேன் ஏனென்றால் நான் இனி ராஜா ராணி 2 தொடரில் இல்லை இனி நான் சந்தியா இல்லை.

-விளம்பரம்-

புதிய சந்தியா :

சந்தியாவாக வேறு ஒருவர் பண்ணப் போகிறார் அவருக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள்’ என்று கூறி இருந்தார். ரியா விலகிய நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்த ஆஷா கௌடா புதிய சந்தியாவாக நடித்து வருகிறார். ரியா இந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில் அதற்கான காரணத்தை அவர் சொல்லவில்லை.

ரியா சொன்ன காரணம் :

இந்நிலையில் ரியா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். தான் வெளியேறியதற்கான காரணம் விரைவில் வெளிவரும் என சூசகமாக கூறி இருக்கிறார்.மேலும் மற்றொரு பதிவில் காரணம் அவருக்கே தெரியவில்லை என கூறியிருக்கிறார். அதனால் காரணம் சொல்லாமல் நீக்கிவிட்டார்களா? என கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால்,  ‘திருமணம் fix ஆனதால் தான் ராஜா ராணியில் இருந்து விலகினேன் என வந்த செய்தி முற்றிலும் பொய்யானது’ என ரியா விளக்கம் கொடுத்து இருக்கிறார்.  

Advertisement