ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகர். அவரு பதில் யாருன்னு தெரியுமா?

0
509
RajRani2
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ராஜா ராணி 2 சீரியலும் ஒன்று. கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடிக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார். முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் இவரே எடுத்து வருகிறார். தற்போது இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் உள்ளது. ஐபிஸ் ஆக வேண்டும் என லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை. சீரியலில் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு சந்தியா இருக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக தன்னுடைய அண்ணன் மூலம் சரவணனுக்கு கல்யாணம் நடந்து விடுகிறது.

- Advertisement -

ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவின் கனவு:

இருந்தும் சந்தியா எப்படியாவது கனவை நனவாக்க வேண்டும் என்று போராடுகிறார். ஆனால், குடும்பத்தில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. சந்தியாவை எதிரிபோல் நினைத்து பழி வாங்குவதற்காகவே அர்ச்சனா பல திட்டங்களை தீட்டி வருகிறார். எப்படியாவது ஒரு நல்ல மருமகள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று சந்தியா போராடுகிறாள். இதற்கு சரவணன் உறு துணையாக நிற்கிறார். தற்போது சந்தியாவின் அண்ணாவிற்கு குழந்தை பிறந்திருப்பதால் சந்தியாவும் சரவணனும் செல்கிறார்கள்.

ராஜா ராணி 2 சீரியல் கதை:

சந்தியா தன் அண்ணாவையும், அண்ணி, குழந்தையை பார்த்து சந்தோசப்படுகிறார். அப்போது சரவணனுக்கு சந்தியாவின் அம்மா அப்பா யார்? என்ற உண்மை தெரிகிறது. இதை தன்னுடைய தந்தையிடம் சரவணன் சொல்கிறார். உடனே சரவணன் தந்தை நீ எப்படியாவது சந்தியாவுடைய கனவு என்ன? என்பதை தெரிந்துகொண்டு பூர்த்தி செய் என்று சொல்கிறார். சரவணனும் சந்தியாவின் கனவை கண்டு பிடிக்க முயற்சிக்கிறார். இப்படி பல திருப்பங்களுடன் ராஜா ராணி 2 சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ராஜா ராணி 2 சீரியல் இருந்து முக்கிய பிரபலமான நடிகர் ஒருவர் விலகி இருக்கிறார்.

-விளம்பரம்-

சீரியலில் இருந்து விலகிய சால்சா மணி:

அவர் வேறு யாரும் இல்லைங்க, சந்தியாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த சால்சா மணி தான் சீரியல் இருந்து விலகி இருக்கிறார். தற்போது இவருக்கு பதில் இவர் என்று சீரியலில் அறிவித்திருந்தார்கள். பொதுவாகவே சீரியலில் முக்கியமான நடிகர்கள் விலகுகிறார் என்றால் சோசியல் மீடியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். ஆனால், சால்சா மணி விலகியது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று அறிவித்த பிறகு தான் பலருக்கும் தெரிந்தது. மேலும், சால்சா மணி ஏன் சீரியல் இருந்து விலகினார்? என்ற காரணம் தெரியவில்லை. தற்போது இவருக்கு பதில் அதே கெட்டப்பில் வேறு ஒரு நடிகர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆலியா மானசா சீரியலில் விலக உள்ளாரா:

அதுமட்டுமில்லாமல் ஆலியா மானசா தற்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கர்ப்பமாக இருந்தும் ஆலியா இந்த சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதனால் இவர் சீரியலில் இருந்து விலகி விடுவாரா? என்று பலரும் கேட்டு இருக்கிறார்கள். ஆனால், இவருடைய கதாபாத்திரம் மட்டும் கொஞ்சம் நாளைக்கு காண்பிக்க படாத மாதிரி இயக்குனர் செய்ய இருக்கிறார் என்று கூறப்படுகிறது. சந்தியா தன்னுடைய பிரசவத்தை முடித்து மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement