காந்தாரவை கதற கதற கண்டம் பண்ண விஜய் டிவி சீரியல் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்

0
626
- Advertisement -

விஜய் டிவியில் ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. தற்போது இந்த சீரியல் தான் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். மேலும், இந்த தொடர் ஐபிஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை. அதோடு இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவின் பெண்ணெட் இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடித்து இருந்தார். பின் ஆல்யாவுக்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் அவர் விலகிவிட்டார். தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார். மேலும், சீரியலில் காமெடி வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த அர்ச்சனா சமீபத்தில் தான் சீரியலில் விலகி இருந்தார்.

- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல் :

இந்த தொடரின் மூலம் அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு பதிலாக சீரியலில் வேறு ஓரு அர்ச்சனா என்பவர் தான் வேறு வருகிறார். இப்படி சீரியலில் பல மாற்றங்கள் நடந்தாலும் சீரியல் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது சீரியலில் அர்ச்சனாவிற்கு பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால், அவர் ஆண் வாரிசு வேண்டும் என்று குழந்தையை மாற்றி கொள்கிறார். இந்த உண்மை யாருக்கும் தெரியவில்லை. எல்லோருமே அர்ச்சனாவிற்கு ஆண் குழந்தை தான் பிறந்திருக்கிறது என்று சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

கடவுளாகும் சரவணன் :

இப்படி ராஜா ராணி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தான் இந்த சீரியலின் கதாநாயகியாகிய சந்தியா ஐபிஎஸ் பயிற்சிக்காக சென்றுள்ளார். அங்கு அவர் பல பிரச்னைகளை சந்திக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் அந்த காட்சிக்கு ஜெயஹிந்த் படத்தில் வந்த காட்சியை அப்படியே எடுத்து வைத்திருந்தனர் ராஜா ராணி படக் குழுவினர். இந்நிலையில் தான் ராஜா ராணி சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கேலிக்கு உள்ளாகி வருகிறது.

-விளம்பரம்-

ப்ரோமோ :

அதாவது தற்போது வெளியான ப்ரோமோவில் சந்தியாவிற்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால் சரவணன் கடவுளாக மாறுகிறார் இதில் காமெடி என்னவென்றால் தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வரும் காட்சியையே அப்படியே காப்பியடித்து எடுத்து வைத்திருக்கிறார் ராஜா ராணி 2 இயக்குனர்.

பட்ஜெட் காந்தாரா :

சிலர் இந்த காட்சிக்கு வரவேற்பு கொடுத்தாலும் பலர் இதுதான் எங்களுடைய பட்ஜெட் “காந்தாரா” என்று கலாய்த்து வருகின்றனர். மேலும் இயக்குனரையும் உங்களுக்கு சொந்தமாக யோசிக்கும் திறமையே கிடையாதா என கடுமையாக கழுவி ஊற்றி வருகின்றனர். பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும் இன்னும் என்னென்ன கொடுமைகளை விஜய் தொலைக்காட்சி செய்யப்போகிறது என்று.

Advertisement