17 வது போட்டியாளராக நுழைவும் பிரபல சீரியல் நடிகை.! லாஸ்லியாவிற்கு போட்டி வந்தாச்சு.!

0
52434
Kamal

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்தவர் வனிதா விஜயகுமார் தான். ஆனால், கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேற்றப்பட்டு விட்டார். இவர் வெளியிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் எளிதாக சண்டையோ சர்ச்சையோ பெரியதா நடைபெறவில்லை. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலம் ஒரு புதிய போட்டியாளர் விரைவில் களம் இறங்கி இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது.

Image result for sangeetha krish

ஆரம்பத்தில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார் மீரா மிதுன். இதையடுத்து பாத்திமா மற்றும் வனிதா வெளியேறியதால் பிக்பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டிகளில் மட்டுமே இருக்கின்றன.ர் இந்த நிலையில் வைல்ட் கார்டு போட்டியாளராக யார் செல்லப் போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த 17ஆவது போட்டியாளர் சங்கீதாவாக இருக்கும் என்று சமீபத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இதையும் பாருங்க : மழையில் மைக்கல் ஜாக்சன் நடனமாடி அசத்திய சாண்டி.!இதெல்லாம் போட மாற்றாங்களே.! 

- Advertisement -

ஆனால் சங்கீதாவின் கணவரான கிருஷ், சங்கீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாகக் கூறப்படும் செய்தி வெறும் வதந்தி தான் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி பிக்பாஸ் வீட்டில் 17வது போட்டியாளராக விஜய் டிவியில் சீரியல் நடிகை ஆலியா மானசா கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Image result for alya manasa

சீரியல் நடிகையான ஆல்யா மானசா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் ‘செம்பா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இந்த தொடர் நிறைவடைய உள்ளதால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷாலு சம்மு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17வது போட்டியாளர் கண்டிப்பாக ஆல்யா மானசா தான் என்று அடித்துக் கூறி இருந்தார். எனவே, ஆல்யா மானசா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவர் லாஸ்லியாவிற்கு நிச்சயம் போட்டியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை இந்த செய்தியை உறுதி செய்யப்பட்டதும் விரைவில் நமது வலைதளத்தில் அப்டேட் செய்கிறோம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement