கர்ப்பமாக இருக்கும் வேலையில் நடு காட்டில் ஆபத்தில் சிக்கிய ஆல்யா. காப்பாற்றிய மீட்புக்ழு. வீடியோ இதோ.

0
45907
alya
- Advertisement -

சமீப காலமாகவே சினிமா திரைப்படங்களுக்கு நிகராக தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. சினிமா துறையில் உள்ள நடிகர், நடிகைகளை போலவே சீரியல் வரும் நடிகர், நடிகைகளும் மக்கள் மனதில் அதிக இடம் பிடித்து உள்ளனர். தற்போது மக்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதில் தான் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். அதிலேயேயும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சீரியலில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் பல பிரபலமான சீரியல் தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. கடந்த ஆண்டு வெற்றிகரமாக முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

ராஜா ராணி சீரியலில் சின்னையாவாக சஞ்சீவும், செம்பாவாக ஆலியா மானசாவும் நடித்து இருந்தார்கள். இந்த சீரியல் முடிவடைந்ததால் பல பேர் வருத்தப்பட்டார்கள். ராஜா ராணி சீரியல் இன் மூலம் தமிழக மக்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ஆலியா மானசா. அல்யா மானசா அவர்கள் சீரியல் நடிப்பதற்கு முன்பாகவே இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பாரப்பான ‘மானாட மயிலாட’ எனும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று நடனம் ஆடி இருந்தார். பின் இவர் மானஸ் என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார். இவர் சீரியலில் நடிப்பது இவரது காதலருக்கு பிடிக்காது என்பதால் இவர்கள் இருவரும் சண்டை போட்டு பிரிந்து விட்டார்கள். இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

- Advertisement -

இதையும் பாருங்க :சிவாஜி,கமல் சாதனையை முறியடிக்க போகும் நடிகர் விக்ரம். எப்படி தெரியுமா ?

கடந்த வருடம் இவர்களுடைய நிச்சயதார்த்தம் பகிரங்கமாக நடந்தது. ஆனால், இவர்களுடைய திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்து முடிந்தது. இந்த சீரியலுக்கு பிறகு இவர் நடிப்பார் என்று பார்த்தால். திடீரென்று திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். தற்போது நடிகை ஆலியா மானசா அவர்கள் 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சமீபத்தில் தான் நடிகை ஆலியா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் தனது நண்பர்களுடன் நியூ இயர் கொண்டத்திற்கு கோத்தகிரிக்கு சென்று இருந்தார்கள். அங்கு அனைவரும் மலை ஏறினார்கள். அப்போது 7 மாதம் கர்ப்பமாக இருந்த ஆல்யாவால் மலை ஏற முடியவில்லை. இதனால் ஆல்யா தன் கணவர் சஞ்சீவ் உடன் பக்கத்தில் இருந்த ஒரு இடத்தில் தங்கியிருந்தார்.

-விளம்பரம்-

பின் இரவு ஆல்யா, சஞ்சீவ் தங்களுடைய ஜீப்பில் கிளம்பி சென்றார்கள். ஆனால், ஜீப் பாதி வழியில் ரிப்பேர் ஆகி விட்டது. இவர்கள் இருவரும் நடுக்காட்டில் சிக்கிக் கொண்டார்கள். இவர்கள் இருந்த இடம் யானைகள் நடக்கும் பாதையாம். பின் இவர்களுடன் வந்தவர்கள் இந்த தகவல்களை அறிந்து உடனே இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். இயக்குனர் பிரவீன் பெண்ணெட் மற்றும் ஈரமான ரோஜா சீரியல் நாயகன் திரவியம் இருவரும் தங்களுடைய ஜீப்பில் வந்து ஆல்யா மற்றும் அவருடைய கணவர் சஞ்சீவை மீட்டு உள்ளனர். அப்போது நடந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Advertisement