சினிமாவைப் பொருத்தவரை ஒரு சில படங்களில் ஹீரோயின்களை விட அவர்களது தோழிகளாக வரும் நடிகைகள் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விடுகிறார்கள். அதே போல குறும் படங்களில் நடித்து பின்னர் அதன் மூலம் பல்வேறு நடிகைகள் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ளனர். அந்த வகையில் தான்யா பாலகிருஷ்ணனும் ஒருவர். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘7 ம் அறிவு’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்திருந்தவர். மேலும், தமிழில் பல்வேறு குறும் படங்களிலும் நடித்துள்ளார்.
7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் அதன் பின்னர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த ‘காதலில் சுதப்புவது எப்படி’ மற்றும் ‘ராஜா ராணி’, போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். அதன் பின்னர் தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை தான்யா.தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் பாருங்க : என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் – ரைசாவின் முகம் வீங்கிய விவகாரம் குறித்து மருத்துவர் குற்றச்சாட்டு.
மேலும் கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது ‘வாட்ஸ்அப் வேலைக்காரி’ என்ற வெப் சீரீஸிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் சட்டை பட்டனை துறந்து கவர்ச்சியான போஸில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இவரும் காமெடி நடிகர் சதீஷும் சைமா விருது வழங்கும் விழா ஒன்றை தொகுத்து வழங்கினார். அப்போது சதீஷ், ஆண்கள் அணியும் ஜாக்கெட் ஒன்றை அணிந்திருந்தார். அதனை கிண்டல் செய்யும் விதமாக இதெல்லாம் ஒரு டிரஸ்ஸா என்று தான்யா கூறியிருந்தார்.உடனே சதிஷ் தன்யாவை மேடைக்கு பின்னால் திரும்பி அங்கு என்ன எழுதியிருக்கிறது என்று படியுங்கள் என்று கூறினார். உடனே தான்யாவும் திரும்ப அவரது அவர் அணிந்திருந்த ஆடையை கிண்டல் செய்தார் சதீஷ். இதனால் தான்யாவிற்கு கடும் சங்கடமாகிவிட்டது. அந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்