ஒரே டைரக்டருக்கு ஹீரோ,ஒரே டைம்ல அப்பாவாக போறோம். ராஜா ராணி சஞ்சீவ் பதிவிட்ட புகைப்படம்.

0
45683
alya
- Advertisement -

வெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் இருக்கும் நடிகர், நடிகைகளும் நிஜ வாழ்க்கையில் ஜோடிகளாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ராஜா ராணி சீரியலில் காதலர்களாக வலம் வந்த ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ராஜா ராணி சீரியல் மூலம் ஆலியா மானசா, சஞ்சீவ் இளைஞர்களிடமும், பல குடும்பங்களின் மனதிலும் பெரும் வரவேற்பை பெற்றார்கள்.

-விளம்பரம்-

ராஜா ராணி சீரியலில் சின்னையாவாக சஞ்சீவும் , செம்பாவாக ஆலியா மானசாவும் நடித்து இருந்தார்கள். இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், இவர்கள் யாரிடமும் தெரியப்படுத்தாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள். காரணம் ஆல்யா மானசாவின் பெற்றோர்கள் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததனால் தான் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

- Advertisement -

பின் இவர்கள் திருமணம் முடிந்து வரவேற்பு விழா கோலாகலமாக நடந்தது. அதில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொணடனர். மேலும், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆல்யா மானசா கர்ப்பமாக இருப்பதாகாக சஞ்சீவ் மகிழ்ச்சியுடன் கூறி இருந்தார். ஆலியா மானசா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். ஜனவரி மாதம் தான் ஆலியா மானசாவிற்கு வளைகாப்பு நடந்தது. வளைகாப்பு போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார் சஞ்சீவ். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி தாங்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு தங்களுடைய அன்பை வெளிக்காட்டி வருகிறார் சஞ்சீவ்.

-விளம்பரம்-

இந்த சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரியோ ராஜ் அவரது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஒரே டைரக்டருக்கு ஹீரோ, ஒரே டைம்ல டாடி ஆகா போறோம், ஒரே ஹாஸ்பிட்டலில் பார்க்கபோறோமே. வாழ்த்துக்கள் ரியோ ராஜ் மற்றும் ஸ்ருதி என்று குறிப்பிட்டுள்ளார். ரியோ ராஜ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தவர். மேலும், அந்த இயக்குனர் தான் ராஜா ராணி சீரியலை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement