தனது மனைவியின் கர்ப்பம் குறித்து சஞ்சீவ் போட்ட பதவி. குவியும் வாழ்த்துக்கள்.

0
10997
sanjeev-alya
- Advertisement -

தற்போதெல்லாம் மக்கள் தியேட்டருக்கு சென்று படங்கள் பார்க்கும் ஆர்வம் காட்டுவதை விட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதில் தான் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். அதிலேயேயும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் விஜய் டிவியில் பல பிரபலமான சீரியல்கள் ஒளிபரப்பாகின. சில மாதங்களுக்கு முன்னால் முடிவடைந்த ராஜாராணி சீரியல் இளைஞர்களிடமும், பல குடும்பங்களின் மனதில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. ராஜா ராணி சீரியலில் சின்னையாவாக சஞ்சீவும் , செம்பாவாக ஆலியா மானசாவும் நடித்து வந்தார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-80.jpg

- Advertisement -

இவர்களுடன் பல நடிகர்களும் நடித்து வெற்றிகரமாக பல வருடங்களை கடந்து ஓடிய இந்த சீரியல் சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது.இதனால் பல பேர் வருத்தத்தில் ஆழ்ந்தனர். இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது.கடந்த சில மாதங்களுக்கு முன் அவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தத நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

இதையும் பாருங்க : உதயமானது அஜித் திராவிட முன்னேற்ற கழகம். உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆரம்பமா.

சீரியல் நடித்த சிலநாட்களிலேயே மக்களின் மனதில் அதிக இடம்பிடித்தவர் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் மக்களிடையே பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. சமீபத்தில் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சியில் இருக்கும் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானஸாவும் பங்குபெற்றனர்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் சஞ்சீவ், விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிகில்’ படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த நடனத்திற்கு பின்னர் மேடையில் பேசிய சஞ்சீவ், ஆல்யா மானஸா கற்பப்பாக இருப்பதை அறிவித்ததும் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். இந்த நிலையில் இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் சஞ்சீவ் தனது சமூக வலைதளத்தில் ஆல்யா மானஸா கர்ப்பமாக இருபதை அறிவித்துள்ளார்.இதனால் ரசிகர்கள் சஞ்சீவ்-மானஸா ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement