காதல் முறிந்ததா..? புகைப்படத்தால் ரசிகர்களை வருத்தப்படவைத்த செம்பா..! காரணம் என்ன ..?

0
1431
semba

சினிமா நடிகைகளை விட சீரியலில் நடிக்கும் ஹீரோயின்கள் வெகு விரைவாக பிரபலமடைந்து விடுகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ‘ராஜா ராணி’ சீரியலில் செம்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆலியா மானஸா தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துவிட்டார்.

- Advertisement -

சீரியல் நடிப்பதற்கு முன்பாகவே இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பிப்பார்ப்பான ‘மானாட மயிலாட’ எனும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும், மானஸா, மானஸ்என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார்.ஆனால், இவர் சீரியலில் நடிப்பது இவரது காதலருக்கு பிடிக்காது என்பதால் இவர்கள் இருவருக்கும் சண்டை கூட வருமாம். சண்டை வரும் போதெல்லாம் நடிகை மானஸா தனது சமூக வலைத்தளங்களில் சோகமான சில பதிவுகளை பதிவிட்டு வருவார்.

இந்நிலையில் நடிகை மானஸா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில்’ என்னுடைய கடைசி புண்ணகை இதுதான். கடைசியாக நேற்று இருந்தது. தற்போது என்னை சுற்றியுள்ள நபர்கள் என்னுடைய சந்தோசத்தை பறித்து விட்டனர். எனக்கு இது போன்ற வாழ்க்கையை அளித்த கடவுளுக்கு நன்றி. என்னை சுற்றி சில கெட்டவர்கள் இருக்கும் போது நான் ஏன் கடவுளை திட்ட வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

மானஸா இது போன்ற சோகமாக பதிவிட்டதால் அவர் மீண்டும் தனது காதலருடன் சண்டை போட்டுக் கொண்டாரா என்று அவரது ரசிகர்கள் நினைத்து வருகின்றனர்.எது எப்படியோ ‘குமுதா நாட் ஹாப்பி ஆன்னாச்சி ‘என்று அவரது ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.

Advertisement