விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 'ராஜா ராணி' தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார்.
[embed]https://twitter.com/AlyaManasa/status/1007130495442870273[/embed] ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாட' என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றிருந்தார். நடிப்பு ,நடனம், டப் ஸ்மாஷ் என்று அசத்தி வரும் மானசா தனது அன்றாட நடவடிக்கைளையும், சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இவர் எதை பதிவிட்டாலும் அது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி விடுகிறது, சமீபத்தில் இவர், ராஜா ராணி சீரியலில் தன்னுடன் நடிக்கும் சஞ்சீவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு 'வித் மை பேபி' என்று குறிப்பிட்டிருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் இருவரையும் இணைத்து பேச, அந்த பதிவை உடனே தூக்கி விட்டார். இந்நிலையில் நடிகை மானசா, புதிதாக பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் நடிகை மானசா கையில் குளியல் சோப்பு ஒன்றை வைத்துக் கொண்டு புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் மேக் அப் எதுவும் இல்லாமல் சிம்பிளாக இருந்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட சில இன்ஸ்டகிராம் வாசிகள் , இது தான் உங்கள் உண்மையான அழகு, மேக் அப் போடாமல் உங்கள் முகத்தை பார்க்க முடியவில்லை என்று கிண்டல் செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த மானசாவின் ரசிகர்கள் அவர் மேக் அப் இல்லை என்றாலும் அழகு தான், அவர்களை கிண்டல் செய்ய உங்களுக்கு அருகதை இல்லை என்று மானஸாவை கிண்டல் செய்தவர்களை திட்டி தீர்த்து வருகின்றனர்.சினிமாReading time · 1 min
ராஜா ராணி செம்பா வெளியிட்ட போட்டோ..! சண்டை போட்ட ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே
Written by
A
Ajju
Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).
Keep Reading
Stories worth your time

“Independent ஆன பெண் தான் எனக்கு பிடிக்கும்” – ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

“விஜய் அண்ணாவின் புகழை விட மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே முக்கியம்” – சிலம்பரசன்

“11 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன்” – அனுபமா பரமேஸ்வரனின் பழைய ஆசை வைரல்!

2018 ஐபிஎல் கம்பேக்: 'டேடிஸ் ஆர்மி' விமர்சனங்களை உடைத்து சிஎஸ்கே சாம்பியனான கதை! - டுவைன் பிராவோ நெகிழ்ச்சி

“இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.. FILE-ஐ ஓபன் பண்ணுங்க” – சட்டசபையில் சீறிய உதயநிதி
