அப்போ நானும் அவுட்டா ? – ராஜா ராணி சீரியல் முக்கிய பிரபலம் வெளியிட்ட புகைப்படம்.

0
558
rajarani
- Advertisement -

ராஜா ராணி 2 சீரியலின் லேட்டஸ்ட் புரோமாவிற்கு சரவணனின் தந்தையான நடிகர் சைவம் ரவி பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவி சீரியல்கள் எல்லாம் தற்போது டாப் டிஆர்பி ரேட்டிங்கில் இருக்கிறது. அந்த வகையில் சீரியல் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. தற்போது இந்த சீரியல் தான் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். மேலும், இந்த தொடர் ஐபிஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை. அதோடு இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவின் பெண்ணெட் இயக்கி வருகிறார்.

- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல் :

இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடித்து இருந்தார். பின் ஆல்யாவுக்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார். மேலும், சீரியலில் காமெடி வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த அர்ச்சனா சமீபத்தில் தான் சீரியலில் விலகி இருந்தார். இந்த தொடரின் மூலம் அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு பதிலாக சீரியல் நடிகை வேறு ஓரு அர்ச்சனா என்பவர் தான் நடித்து வருகிறார்.

சீரியலில் விலகிய நடிகை:

இப்படி சீரியலில் பல மாற்றங்கள் நடந்தாலும் சீரியல் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது சீரியலில் ஆதி, ஜெசியை காதலித்து கர்ப்பம் ஆக்கி ஏமாற்றி விடுகிறார். பின் சரவணன் குடும்பத்திற்கு ஆதி செய்த வேலை தெரிய வருகிறது. இதனால் மொத்த குடும்பமும் ஆதியின் மீது கோபத்தில் இருக்கிறார்கள். ஜெசி- ஆதிக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால் ஜெசி தன்னுடைய மதத்தையும், அடையாளத்தையும் விட்டுவிட்டு இந்த வீட்டிற்கு வர வேண்டும் என்று சிவகாமி கண்டிசன் போடுகிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் சரவணனின் அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

-விளம்பரம்-

சீரியலின் கதை:

இதனால் சரவணன் மொத்த குடும்பமே பரிதவித்து போய் இருக்கிறது. இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ராஜா ராணி 2 சீரியலின் லேட்டஸ்ட் பிரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், சரவணன் தந்தைக்கு ஒரு குறிப்பிட்ட வகை ரத்தம் தேவைப்படுகிறது என டாக்டர் கேட்கிறார்கள். ஆனால், அந்த ரத்தம் கிடைக்கவில்லை. பின் சந்தியா அந்த ரத்தம் ஜெசிக்கு இருக்கிறது என்று கூறியவுடன் சிவகாமி, அவருடைய மாமியாரும் எப்படியாவது ஜெசியை வரவழைத்து ரத்தத்தை கொடுக்க சொல்லுங்கள் என்று கூறுகிறார்.

நடிகர் சைவம் ரவி பதிவு:

உடனே, ரத்தம் தேவைப்படும்போது அதில் மதம் குறுக்க வரவில்லையா? மருமகளாக ஏற்றுக்கொள்ள மட்டும் உங்களுக்கு மதம் தடையாக இருக்கிறதா? என்று சந்தியா கேட்கிறார். இந்த புரோமோவை ஹாஸ்பிடலில் அடிபட்டிருக்கும் சரவணனின் தந்தையான நடிகர் சைவம் ரவி, தன்னுடைய இன்ஸ்டாவில் ஹாஸ்பிடலில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அப்ப நான் காலியா! என்று கிண்டலாக பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement