இந்த குறையால் தான் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை ! செம்பா வருத்தம்

0
1404
Alya manasa

தமிழ் சினிமா ஹெராயின் என்றாலே அவர்கள் பார்ப்பதற்கு அலகழுவும் மற்றும் அளவான தோற்றத்தில் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு வாய்ப்பு தேடி வரும்.

semba

அப்படி இருக்க தற்போது விஜய் டிவி யில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜா ராணி என்னும் தொடரில் செம்பா என்னும் கதாபாத்திரம் மக்கள் மனதில் மிகவும் பிரபலமானது.அந்த கதாபாத்திரத்தில் நடித்த ஆலியா மனசா ,தான் படங்களில் நடிப்பது தான் தனக்கு ஆசை என்றும் ஆனால் அது நிறைவேறவில்லை என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இவர் சென்ற ஆண்டு வெளிவந்த ஜூலியும் 4 பேரும் என்ற படத்தில் நடித்திருந்தார்.காமெடி படமாக எடுக்கப்பட்டிருந்த அந்த படத்தில் சின்ன திரை நடிகர் ரியோ ராஜ், யோகி பாபு,அமுதவானான் போன்றவர்கள் நடித்திருந்தனர். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை. எனவே அந்த படத்திற்கு பின்னர் எந்த பட வாய்ப்புகளும் மானசா வீட்டு கதவுகளை தட்டவில்லை, இதனால் தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்காக வந்துவிட்டார் மானசா.

semba

மேலும் தாம் சினிமாவில் நடிப்பதை தான் விரும்புவதாகவும் எனது துரதிர்ஸ்டம் தான் குள்ளமாக இருப்பதால் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை என்றும், இருப்பினும் சின்னத்திரை தொடர்களில் நடிக்கும்போது நான் சினிமாவில் நடிப்பதாக எண்ணி தன்னை சமாதானம் செய்துகொள்வதாக மனசா இறுகிய மனதுடன் கூறியுள்ளார்.