மேக்கப் இல்லாமல் செம்பா வெளியிட்ட போட்டோ..! கிண்டல் செய்த ரசிகர்கள்.! போட்டோ இதோ.!

0
1496
Semba
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மானசா, இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார்.

-விளம்பரம்-

சின்னத்திரை நயன்தாரா என்றழைக்கப்படும் இவர், சமூக வளைத்தலளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். “ராஜா ராணி ” சீரியலில் அழகான குடும்ப பெண்ணாக நடித்து வரும் மானசா, சமீபத்தில் மேக் அப் எதுவும் போடாமல் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த புகைப்படத்தை பார்த்த மானசாவின் ரசிகர்கள் ‘மேக் அப் இல்லாமலும் அழகத்தான் இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் 3 மணி நேரத்திற்கு முன்பாக பதிவிடபட்டுள்ள அந்த புகைப்படம் அதற்குள் 37 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் விரும்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றிருந்தார். நடிப்பு ,நடனம், டப் ஸ்மாஷ் என்று அசத்தி வரும் மானசா தனது அன்றாட நடவடிக்கைளையும், சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement