இனி நடிக்க மாட்டேன்.! செம்பா எடுத்த அதிர்ச்சி முடிவு..! இது ஒரு காரணமா..?

0
1317
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார்.

-விளம்பரம்-

semba

- Advertisement -

ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றிருந்தார். அதுபோக ஒரு சில குறும் படத்திலும் நடித்துள்ளார். மேலும், நடிப்பு ,நடனம், டப் ஸ்மாஷ் என்று அசத்தி வருகிறார்.

ஏற்கனவே சீரியல்களில் நடித்த ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் போன்றவர்கள் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மானஸாவிடம் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதா என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

raja-rani-serial

அதற்கு பதிலளித்துள்ள மானஸா, சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனால் எனக்கு தான் விருப்பம் இல்லை.நான் ஏற்கனவே 3 படங்கள் நடித்துள்ளேன் அதில் ஒன்று மட்டும் வெளியானது,அதுவும் சரியாக ஓடவில்லை. நான் குள்ளமாக இருப்பதால் எனக்கு ரீச் கிடைக்கவில்லையோ என்று எனக்கு தோன்றியது அதனால் திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். எனக்கு அந்த ஆசையும் இல்லை என்று பதிலளித்துள்ளார்.

Advertisement