ராஜா ராணி சீரியல் நடிகையின் கணவர்,மகள் இறப்பு – குடிகார மகனின் வெறிச்செயல்

0
821
rajarani
- Advertisement -

ராஜா ராணி சீரியல் நடிகையின் மகன் தன்னுடைய தந்தை மற்றும் அக்காவை கழுத்தறுத்து கொலை செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. இந்த சீரியலில் முதல் சீசனில் ஆலியா மானசா, சஞ்சீவ் நடித்திருந்தார்கள். இந்த சீரியல் முடிவடைந்தது தொடர்ந்து தற்போது ராஜா ராணி 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-
கொலை செய்யப்பட்ட செல்வராஜ் மற்றும் பிரியா

இந்த நிலையில் ராஜா ராணி சீரியலில் நடித்தவர் தான் நடிகை சாந்தி. இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியை சேர்ந்தவர். இந்த பகுதியில் தான் இவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் செல்வராஜ். இவர் இசைப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ராஜேஷ், பிரகாஷ் என்ற மகன்களும், பிரியா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் ராஜேஷ் மற்றும் பிரியா இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

- Advertisement -

நடிகை சாந்தி குடும்பம்:

இவர்கள் இருவருமே தனியாக சென்று விட்டனர். சாந்தியின் மகள் பிரியா தன்னுடைய பெற்றோரின் வீட்டு அருகே தன்னுடைய கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்களுடைய கடைசி மகன் தான் பிரகாஷ். இவர் மட்டும் தன்னுடைய பெற்றோர்களுடன் இருக்கிறார். மேலும், பிரகாஷ் சினிமாவுலகில் டப்பிங் கலைஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று காலையில் தன்னுடைய அக்கா பிரியா வீட்டிற்கு பிரகாஷ் சென்றிருக்கிறார்.

தந்தை-அக்காவை கொலை செய்த பிரகாஷ்:

அங்கு இருவருக்குமே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கோபத்தில் பிரகாஷ் கத்தியை எடுத்து பிரியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பித்து இருக்கிறார். இந்த சம்பவத்தை பார்த்த ப்ரியாவின் குடும்பத்தினர் அழுது கொண்டு சாந்தியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு சாந்தியின் கணவர் செல்வராஜ் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். பிரகாஷ் தன்னுடைய தந்தையை கொலை செய்த பின்பு தான் அவர் அக்கா பிரியாவை கொலை செய்து இருக்கிறார் என்பது தெரிய வந்தது.

-விளம்பரம்-

போலீஸ் விசாரணை:

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து இருவருடைய உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். பின் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து இருக்கிறது போலீஸ். மேலும், பிரகாஷ் இடம் போலீஸ் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். இந்த விசாரணையில் பிரகாஷ் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது, பிரகாஷ் கஞ்சா மற்றும் குடிப்பழகத்திற்கு அடிமையானவர்.

பிரகாஷ் குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் அவர் மனநலமும் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. மனநல பிரச்சனையால் அவஸ்தைப்பட்டு வரும் மகனுக்கு மருந்து வாங்குவதற்காக தான் தாய் சாந்தி மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அப்போதுதான் இந்த ஒரு கொடூர செயலை மகன் பிரகாஷ் செய்திருக்கிறார். மேலும், போலீசார் பிரகாஷிடம் இந்த கொலைக்கு வேறு என்ன தொடர்பு இருக்கிறது? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறது. தற்போது இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement