ராஜா ராணி, பூவே உனக்காக போன்ற பலவேறு சீரியல்களில் நடித்து வரும் ஸ்ரீதேவி அசோக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. தமிழில் பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் இடம்பிடித்தவர் ஸ்ரீதேவி. தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மூலம் தான் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின்னர் தமிழில் ‘கஸ்தூரி’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’ என 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’ போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். ராஜா ராணி’ சீரியலில் கொடூரமான வில்லியாக, பார்ப்பவர்களின் கண்களில் கத்திரி வெயிலைக் கடத்திக்கொண்டிருந்தவர், ஶ்ரீதேவி. ஆனால், நிஜத்தில் இவர் மார்கழி மாத அதிகாலைபோல செம கூல், பயங்கர ஜாலி டைப்.
இதையும் பாருங்க : தேசத்தை விட மொழி தான் எனக்கு முக்கியம் – ஜி வி பிரகாஷின் கருத்தால் கடுப்பான நெட்டிசன்கள் (அதுவும் யாரா இருக்கும்)
செல்லப் பிராணிகளின் காதலியான ஶ்ரீதேவிக்கு, அவரைப்போலவே செல்லப் பிராணி காதலரான அசோக் சிந்தாலா என்பவருடன் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இப்படி ஒரு நிலையில் சில மாதங்களாக கர்ப்பமாக இருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இப்படி ஒரு நிலையில் தனது மகளுக்கு ‘சித்தாரா சீந்தலா’ என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்து உள்ளார். அப்படி என்றால் ‘Star’ என்று அர்த்தமாம். மேலும், குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே பையன் பிறந்தால் ‘A’ என்று ஆரம்பிக்கும் பெயரையும் பெண் பிறந்தாள் ‘S ‘ என்று ஆரம்பிக்கும் பெயரை வைக்க முடிவு செய்ததாகவும் கூறியுள்ள ஸ்ரீதேவி, தனது மகளை சிதா என்று அழைப்பேன் என்றும் கூறியுள்ளார்.