தேசத்தை விட மொழி தான் எனக்கு முக்கியம் – ஜி வி பிரகாஷின் கருத்தால் கடுப்பான நெட்டிசன்கள் (அதுவும் யாரா இருக்கும்)

0
972
gv
- Advertisement -

“எனக்கு என் மொழிதான் முக்கியம். இரண்டாவது தான் தேசம்” என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளது தற்போது சமூக வலைதளத்தில் Bjp ஆதரவாளர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகர் ஜீ.வி. பிரகாஷ். தற்போது உள்ள பிரபலமான நடிகர்களின் முன்னணி நடிகராக ஜி.வி. பிரகாஷ் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் திரிஷா இல்லன்னா நயன்தாரா, பென்சில் போன்ற படங்களில் நடித்தாலும் தமிழ் மொழி மீது அதிக பற்றுக்கொண்டவர்.

-விளம்பரம்-

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இயக்குநர் ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கத்தில் பெருங்காற்று” என்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜி வி பிரகாஷ் தான் இசையமைத்து உள்ளார். இந்த பாடல் தொடர்பான அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி வி பிரகாஷ்,

இதையும் பாருங்க : படு ரோமன்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டு தனது காதலரை அறிமுகம் செய்த அழகு சீரியல் நடிகை (லவ்வரா இருந்தாலும் ஒரு அளவு வேணாமா )

- Advertisement -

சுதந்திரப் போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில் 12 மொழிகளில், பெருங்காற்றே என்ற பாடல் வடிவமைக்கிறது. மேலும் இந்த பாடலில் இந்தியாவின் 12 விளையாட்டு வீரர்கள் மற்றும் 12 நடிகர்கள் நடிக்கவுள்ளனர். நாம் மொழிக்காக போராடி வென்றுள்ளோம். மொழியா? தேசமா? என்றால், எனக்கு என் மொழிதான் முக்கியம். என் மொழி தான் தாய்; இரண்டாவது தான் தேசம் என்று கூறி இருந்தார்.

ஜி வி பிரகாஷின் இந்த பேச்சுக்கு பலர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் பலர் இவரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பிஜேபி ஆதாரவாளர்கள் ஜி வி பிரகாஷின் இந்த கருத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். அதில், இவன் வேற ஊடைல உருட்டுகிட்டு. தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு பெருசா பேசுனான், ஆனா அடுத்த நாளே செம னு ஒரு படத்த ரிலீஸ் பண்ணுனா ன். விளம்பர பிரியன் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இன்னொருவர், G(ஆங்கிலம்) V(ஆங்கிலம்) பிரகாஷ் ( ஷ் சமஸ்கிருதம் ) வந்துட்டாரு தூக்கிகிட்டு என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு ரசிகர், எனக்கு தேசத்தை விட தமிழ் மொழிதான் முக்கியம்: GV பிரகாஷ் சரி நீ நடிச்ச நல்லதா நாலு தமிழ் படத்தோட பெயர் சொல்லு? டார்லிங் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா பென்சில் Bruce lee என்று ஜி நடித்த படங்களை வைத்து விமர்சனம் செய்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இதற்கெல்லாம் மறைமுகமாக பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது ஜி வி பிரகாஷ், தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது எதுவும் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement