ராஜா ராணி ஆல்யா மானஸாவிற்கு இவ்வளவு அழகான தங்கை இருக்கிறாரா.! அவரே வெளியிட்ட புகைப்படம்.!

0
1398
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மானசா, இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார். 

-விளம்பரம்-

ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றிருந்தார். நடிப்பு ,நடனம், டப் ஸ்மாஷ்என்று அனைத்திலும் அசத்தி வரும் மானசா தனது அன்றாட நடவடிக்கைளையும், சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

- Advertisement -

ஆல்யா மானஸா ஏற்கனவே மானஸ் என்பவரை காதலித்து வந்தார். ஆனால், கடந்த மாதங்களுக்கு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணத்தால் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது ராஜா ராணி சீரியலில் வரும் சஞ்சீவை காதலித்து வருகிறார் மானசா.

View this post on Instagram

Shopping with my sister ???

A post shared by Alya Manasa (@alya_manasa) on

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் மானஸா, அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்த நிலையில் டுவிட்டரில் ஆல்யா மானசா என்ற பெயரில் அதிக அக்கவுண்ட் இருக்கிறது அதில் ஒரு அக்கவுண்டில் இருந்து  ஆல்யா மானசாவின் புகைப்படத்தையும் மேலும் ஒரு புகைப்படத்தையும் இணைத்து எனது தங்கையுடன் ஷாப்பிங் சென்றேன் என பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement