ராஜா ராணியில் இருந்து திடீரென நீக்கப்பட்ட ரியா, வேறு சேனலில் கிடைத்த சீரியல் வாய்ப்பு. டைட்டில் இதான்

0
180
riya
- Advertisement -

ராஜா ராணி தொடரில் இருந்து திடீரென நீக்கப்பட்ட ரியா தற்போது அடுத்து நடிக்கும் புதிய தொடரை பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது ராஜா ராணி சீரியல் தான். இந்த சீரியல் ஏற்க்கனவே முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தொடர்ந்து விறுவிறுப்பாக செல்வதினால் டிஆர்பியிலும் முன்னிலை வகித்து வருகிறது. ராஜா ராணி சிரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கும் பெண் ஒருவர் இனிப்பு கடை நடத்தி வரும் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்.

-விளம்பரம்-

இப்படி இருக்கையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய மனைவி ஐபிஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசையை கதாநாயகன் தெரிந்து கொள்கிறார். ஆனால் இந்த ஆசைக்கு எதிராக கதாநாயகனின் அம்மா இருந்து வருகிறார்.இந்நிலையில் இவரை மீறி தன்னுடைய கனவை கதாநாயகி நிறைவேற்றினாரா என்பதுதான் மீதி கதையாக இருக்கிறது. சுவாரசியமாக சென்று கொண்டிருந்த ராஜா ராணி சீரியலில் தொடக்கத்தில் சந்தியாவாக நடிகை ஆலியா மானசா நடித்து வந்தார்.

- Advertisement -

ஆனால் ஆலியா மானசா கர்ப்பமாக இருத்தினால் விலகிய நிலையில் நடிகை ரியா புதிய சந்தியாவாக நடித்து வந்தார். இந்நிலையில் ரியா சீரியலில் இருந்த எந்த காரணமும் சொல்லாமல் விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி ஒரு நிலையில் ரியா, ஜீ தமிழில் ” என்ற புதிய தொடரில் கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ராஜா ராணி சீரியல் நடிகை ரியா மாறியது குறித்து பலவிதமான கருத்துகள்பரவியது.

ரியாவே சீரியலை விட்டு வெளியேறினார் என்று ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால் சிலர் ரியா வெளியூரில் இருந்துள்ளார். அவரை படப்பிடிப்புக்கு அழைத்துள்ளனர் சீரியல் குழுவினர். ஆனால் ரியா வர மறுத்துள்ளார். இதனால் தான் ரியாவை ராஜா ராணி சிரியலில் இருந்து நீக்கியுள்ளனர் என்று பலவிதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. தான் நான் ஒரு மாதத்திற்கு முன்னரே நான் வெளியூர் செல்கிறேன் என்று படப்பிடிப்பு குழுவிடம் சொல்லியிருந்தேன்.

-விளம்பரம்-

அவர்களும் சரி என கூறினார்கள். ஆனால் அதற்கு பிறகு திடீரென கதாநாயகியை மாற்றி விட்டனர். நான் ராஜா ராணி படக்குழுவிடம் கேட்டதற்கு “கம்யூனிகேஷன்” சரியில்லை என்று கூறினார்கள். அது ஏன் என்று புரியவில்லை. அது எனக்கு வருத்தமாகவும், வெறுப்பாகவும் இருந்தது. அதனால் தான் அந்த விஷியம் குறித்து பெரிதாக வெளியில் சொல்லவில்லை எனக் கூறினார்.

Advertisement