எனக்கு இது வர்ல..! வராதத வா வானா எப்படி வரும்..! ராஜா ராணி செம்பா ஓபன் டாக்

0
1119
Aalya-manas
- Advertisement -

ஹீரோ கார்த்திக்கின் (சஞ்சீவ்) முன்னாள் காதலி திவ்யா (அன்ஷு ரெட்டி), `மைனர்’ அமுதன் (கோவை பாபு), வில்லன் சஞ்சய் (சுபர்ணன்), வடிவு (ஷப்னம்) என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேதான் அன்று ஆர்ட்டிஸ்டுகள் இருந்தார்கள்.

-விளம்பரம்-

semba

- Advertisement -

`ஆனாலும், செம்பாவும் திவ்யாவும் நேருக்குநேர் சந்திக்கிறக் காட்சிகள் இருக்கு; வெகுளிப் பெண்ணான செம்பாவின் குணாதிசயங்கள் மாறப்போகுதுனு வேற சொல்றாங்க’ என ஒரு சோர்ஸ் ஸ்பாட்டில் நுழைந்ததுமே சொன்னது.

யெஸ், ஷூட்டிங்ல மீட்டிங்காக நாம் சென்றிருந்த அந்த இடம் விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான `ராஜா ராணி’ ஷூட்டிங் ஸ்பாட். மதிய உணவை முடித்துவிட்டு எல்லோரும் கடலை மிட்டாய் கடித்துக்கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

பிரத்யேகப் பயிற்சினு ஏதோ சொன்னாங்களே’ எனக் கேட்டோம்.

அதுவா, ஒரு வருடமா எல்லாத்துக்கும் தலையாட்டிக்கிட்டு, அப்பாவியா அதிர்ந்து பேசாம இருந்த பொண்ணுகிட்ட திடீர்னு போய் அடி உதை முறைனு சொன்னா, அதெல்லாம் உடனே வந்துடுமா? ’இப்படி முறைங்கனு லேசா முறைச்சும் காமிச்சார் டைரக்டர். ஆனா, எனக்கு முறைக்க வரவேமாட்டேங்குது.

Raja Rani

`டேக்’ வாங்கிட்டே இருக்க, கடைசியில அவரே சீரியஸா என்னை முறைக்கிற அளவுக்குப் போயிடுச்சு. `வாழ்க்கையில இதுவரைக்கும் கோபப்பட்டதே இல்லையா’, `ஒருத்தரைக்கூட கைநீட்டி அடிச்சதில்லையா’னு `பாட்ஷா’வுல ரஜினி சார்கிட்ட கேட்கிறமாதிரி எல்லாம்கூட கேட்டுப் பார்த்துட்டாங்க. எதுவும் வொர்க் அவுட் ஆகலை. “வராத கோபத்தை வா வானா… நான் என்ன பண்றது?அதனால, இப்போ டிரெய்னிங் கொடுக்குறாங்க. அதாவது, ரௌத்திரம் பழகப் பயிற்சி” எனச் சிரிக்கிறார்.

Advertisement