ஆல்யா மானஸா, வாணி போஜன் கலந்து கொண்ட ராணி ராணி ஷப்னமின் திருமண வரவேற்பு.! வைரலாகும் புகைப்படங்கள்.!

0
2365
shabnam

சன் டிவி தொலைக்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பாகி இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் பார்க்கும் பிரபல தொடரான ;தெய்வமகள்; சீரியலில் குறும்புக்கார தங்கையாகவும், அப்பாவி குணத்துடனும் நடித்தவர் தான் ஷப்னம். இவர் ஹீரோயின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.ராஜா ராணி சீரியல் தொடரில் வெகுளி ஆகவும் வில்லியாகவும் தன் நடிப்பின் மூலம் அதிக அளவில் ரசிகர்களிடையே பிரபலமானார்.முதலில் வசந்தம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். ‘ராஜா ராணி’ சீரியல் ஷப்னம் திருமண வரவேற்பு… ஆல்யா மானசா, வாணிபோஜன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு!

ஷப்னம் சமீபத்தில் அதாவது 2017ஆம் ஆண்டு சென்னையில் உள்ள கிளப் ஹவுஸ் என்ற இடத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்த நிச்சயதார்த்த விழாவில் தெய்வமகள் சீரியல் வாணி போஜன், ராஜா ராணி சீரியல் நடிகை ஆலியா மானசா, சஞ்சீவ் என உள்ளிட்ட பல நடிகர்களும் கலந்துகொண்டு நிச்சயதார்த்தத்தை சமாய்த்துவிட்டனர். அதுமட்டுமில்லாமல் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எங்களுக்கு நிக்ஹா என்று ஆனந்தத்துடன் கூறினார்.ஆனால் இவர் கூறிய தேதியில் திருமணம் நடைபெற வில்லை. இது குறித்து பல வதந்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தன. அதிலும் இவர்கள் பிரிந்து விட்டார்களோ என்றும் பலர் எண்ணினர். இதுகுறித்து ஷப்னம் இணையதளத்தில் எங்களுக்கு அடுத்த மாதம் ஏழாம் தேதி கல்யாணம் நடைபெற உள்ளது என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

- Advertisement -


Actress shabnam
Actress shabnam

மேலும் அவருடைய திருமணம் குறித்து கேட்டபோது அவர் கூறியது, தன்னுடைய உட்பி பெயர் ஆரியன்.என்னுடைய திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது (அரேஞ்ச் மேரேஜ்) ஆகும். இவர் ஐடி கம்பெனியில் எம்.டி ஆக பணிபுரிந்து வருகிறார். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகுதான் நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம் என்றும் வெட்கத்துடன் கூறினார். அவர் செம கேரக்டர், ரொம்ப கேரிங் பர்சன். திருமணத்திற்கு பிறகு நடிப்பேனா? என்று தெரியவில்லை. நிச்சயதார்த்தம் முடிந்து இதுவரையும் சினிமாவில் நடிக்க யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. சின்ன வயசுல இருந்தே எனக்கு முகத்தில எக்ஸ்பிரஷன் கொடுப்பதில் அதிக ஆர்வம். அதனாலோ என்னவோ நடிப்புக்கு வந்துட்டேன் என்று கூறினார்.

-விளம்பரம்-
Actress shabnam, vanibhojan
Actress chaya singh, actor krishna


மேலும் இவருக்கு கலைஞர் டிவியில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் விரைவாக வாய்ப்பு கிடைத்தது. ஆனா அந்த ஷோல சொதப்பிட்டன். ஆனால் அந்த சோவ பார்த்துட்டு தான் எனக்கு ‘வசந்தம்’ சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பின்னால் தெய்வமகள், ராஜா ராணி என பல சீரியல்களில் நடித்து வந்தேன். அப்போது கல்யாணம் குறித்து கேட்டபோது சில காரணங்களால் நின்றுவிட்டது என்று கூறினார் . தற்போது தீவிரமாக கல்யாண வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது என்று கூறினார்.

Image result for raja rani serial shabnam


எனக்கு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவரிடம் பேச நேரம் கிடைக்கவில்லை அதுதான் மிகப்பெரிய வருத்தமாக உள்ளது என்றும் கூறினார். நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று சோகமாக கூறினார்.அவர் என்னை அதிக அளவில் புரிஞ்சு கிட்ட அன்பான வருங்கால கணவன் என்றும், அடுத்த மாதம் எங்கள் திருமணம் கண்டிப்பாக நடைபெறும் என்றும் கூறினார். இந்த நிலையில் இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி

Advertisement