காதல் திருமணத்தால் தேவயானி அனுபவித்த வேதனைகளை குறித்து இயக்குனர் ராஜகுமாரன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தேவயானி. இவர் மும்பையை சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் சுஷ்மா . இவர் 1993 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தற்போது வரை சினிமாவில் நடித்து வருகிறார்.

மேலும், இவர் தமிழ் சினிமாவில் உள்ள விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து புகழ்பெற்றவர். இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு நடிகை தேவயானி அவர்கள் சினிமா உலகில் இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு காரணம் இயக்குனர் ராஜகுமாரன் தான். ஏன்னா, தேவயானியை சினிமாவில் அறிமுகம் செய்தது ராஜகுமாரன்.
தேவையானி திரைப்பயணம் :
திருமணத்திற்கு பின் தேவையானி அவர்கள் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். படங்களை தவிர இவர் பல தொடர்களிலும் நடித்து வருகிறார். அதிலும் இவர் நடித்த கோலங்கள் சீரியல் ஆறு வருடங்கள் வெற்றிகரமாக ஓடியது. சிறிய இடைவெளிக்கு பின் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்து இருந்தார். தற்போது இவர் சீரியலில் நடித்தும், நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றும் வருகிறார்.

தேவையானி குடும்பம்:
இதனிடையே தேவயானி அவர்கள் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தேவயானி காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பின் நண்பர்கள் முன்னிலையில் தேவயானி- ராஜகுமாரன் திருமணம் திருத்தணியில் நடந்தது. மேலும், இவர்கள் திருமணம் செய்து கொண்டதை அறிந்த இரு வீட்டார் பெற்றோர்களும் பயங்கர கோபத்தில் இருந்தார்கள்.

ராஜகுமாரன் பேட்டி:
இவர்கள் இருவரிடமும் இரு குடும்பத்தாரும் பேசாமல் இருந்தார்கள். அதிலும் தேவயானியின் குடும்பம் இயக்குனர் ராஜகுமாரன் குடும்பத்தின் மீது போலீஸ் புகார் எல்லாம் அளித்திருந்தார்கள். அதற்கு பின் சரியாகி விட்டது. தற்போது இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ராஜ்குமாரன், நாங்கள் திருமணம் செய்தபோது நிறைய விமர்சனங்கள் வந்தது. நான் அழகா இல்லை என்று பல பேர் கிண்டல் எல்லாம் செய்தார்கள். ஆனால் தேவயானி எந்த இடத்திலும் என்னை விட்டுக் கொடுக்கவில்லை.

தேவையானி குறித்து சொன்னது:
என்னைப்போல் குழந்தை பிறந்து அந்த குழந்தையும் இந்த உலகத்தில் கஷ்டப்பட வேண்டாம் என்று நினைத்து நான், தேவையானி இடம் குழந்தையே வேண்டாம் என்று சொன்னேன். ஆனால், தேவயானி அதற்கு மறுத்து விட்டார். அதற்குப் பிறகு தேவயானி கர்ப்பமாக இருந்தார். பிப்ரவரி மாதம் தான் தேதி கொடுத்தார்கள். 48 நாட்களுக்கு முன்னே அவருக்கு வலி வந்துவிட்டது. எங்களுடன் யாருமே இல்லை. அந்த நேரத்தில் எங்களுடைய பக்கத்து வீட்டில் இருந்த ஒரு குடும்பம் தான் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். குழந்தைகளை வளர்த்து எடுப்பதற்கு தேவயானி ரொம்பவே கஷ்டப்பட்டார் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.






