தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தேவயானி.
இவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தேவயானி காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. காதலுக்கு தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பின் நண்பர்கள் முன்னிலையில் தேவயானி- ராஜகுமாரன் திருமணம் திருத்தணியில் நடந்தது.
மேலும், இவர்கள் திருமணம் செய்து கொண்டதை அறிந்த இரு வீட்டார் பெற்றோர்களும் பயங்கர கோபத்தில் இருந்தார்கள். இவர்கள் இருவரிடமும் இரு குடும்பத்தாரும் பேசாமல் இருந்தார்கள். அதிலும் தேவயானியின் குடும்பம் இயக்குனர் ராஜகுமாரன் குடும்பத்தின் மீது போலீஸில் புகார் எல்லாம் அளித்திருந்தார்கள். அதற்கு பின் சரியாகி விட்டது. தற்போது இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
ராஜகுமாரன் பேட்டி:
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ராஜ்குமாரன், நாங்கள் திருமணம் செய்தபோது நிறைய விமர்சனங்கள் வந்தது. நான் அழகா இல்லை என்று பல பேர் கிண்டல் எல்லாம் செய்தார்கள். ஆனால், தேவயானி எந்த இடத்திலும் என்னை விட்டுக் கொடுக்கவில்லை. என்னைப்போல் குழந்தை பிறந்து அந்த குழந்தையும் இந்த உலகத்தில் கஷ்டப்பட வேண்டாம் என்று நினைத்து நான், தேவையானி இடம் குழந்தையே வேண்டாம் என்று சொன்னேன்.
தேவையானி குறித்து சொன்னது:
எனக்கு குழந்தையை பெற்று கொள்ள எண்ணமே கிடையாது. காரணம், குழந்தைகள் பிறந்து அது எனக்கு அப்பாவை பிடிக்கவில்லை, அம்மாவை பிடிக்கவில்லை, என்னை ஏன் இந்த உலகத்திற்கு கொண்டு வந்தீங்க? எப்படி நான் போராடுவது போன்ற பல விஷயங்களை யோசித்தால் குழந்தையைப் பெற்றுக் கொள்ள எனக்கு விருப்பமே இல்லை. இதனால் என்னுடைய மனைவியிடமும் குழந்தை வேண்டாம் என்று சொன்னேன். அவர் கேட்கவே இல்லை.
குழந்தை வளர்ப்பு குறித்து சொன்னது:
குழந்தை கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லி இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அவர் குழந்தையை வளர்க்க ரொம்பவே சிரமப்பட்டார். தேவயானி கர்ப்பமாக இருக்கும் போது பிப்ரவரி மாதம் தான் தேதி கொடுத்தார்கள். 48 நாட்களுக்கு முன்னே அவருக்கு வலி வந்துவிட்டது. எங்களுடன் யாருமே இல்லை. அந்த நேரத்தில் எங்களுடைய பக்கத்து வீட்டில் இருந்த ஒரு குடும்பம் தான் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்.
தேவையானி திரைப்பயணம்:
அப்போது டெலிவரி ரூம் பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்டது. நான், எங்கேயோ குழந்தை அழுகுது சார் என்று சொன்னேன். அவர் உடனே, உங்க குழந்தை தான் அழுகிறது என்று சொன்னார் என பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். மேலும், நடிகை தேவயானி அவர்கள் சினிமா உலகில் இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு காரணம் இயக்குனர் ராஜகுமாரன் தான். இவரை சினிமாவில் அறிமுகம் செய்தது ராஜகுமாரன். திருமணத்திற்கு பின் தேவையானி அவர்கள் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். படங்களை தவிர இவர் பல தொடர்களிலும் நடித்து வருகிறார்.