‘இதனால் தான் என் கணவர் வரல’ – அன்று ராதாரவி கேலியாக சொன்னதை நினைவில் வைத்து கூறிய ராஜலக்ஷ்மி

0
4392
Rajalakshmi
- Advertisement -

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகு நான் ஹீரோயினி ஆகி இருக்கிறேன் என்று பாடகி ராஜலட்சுமி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடகியாக திகழ்பவர் ராஜலக்ஷ்மி. என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர். இந்த பாடலை செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. இருவரும் பாடி இருந்தார்கள். இவர்கள் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்கள்.

-விளம்பரம்-

பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் இவர்கள் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். அதோடு போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பாடி வென்று வீட்டை தட்டிச் சென்றார்.அதோடு இந்த நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இதனை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள்.

- Advertisement -

செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி குறித்த தகவல்:

மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது. தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி இருந்தார். அதே போல ”வாயா சாமி ” பாடலை செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இருவரும் ரி – கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார்கள். தற்போது இருவரும் இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.

ராஜலக்ஷ்மி நடிக்கும் படம்:

இப்படி இவர்கள் இருவரும் சினிமாவில் பிசியாக இருந்து வருகின்றனர். தற்போது ராஜலட்சுமி ‘Licence’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கணபதி பாலமுருகன் என்பவர் இயக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தை ஜே ஆர் ஜே புரோடக்ஷன் சார்பில் என் ஜீவானந்தம் தயாரிக்கிறார். இந்த படத்தில் ராதாரவி, ஜீவானந்தம், விஜய் பாரத், பழ. கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா, அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

காசி விஸ்வநாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறாள் பைஜூ ஜேக்கப் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராஜலட்சுமி கூறி இருந்தது, நான் இதுவரை எந்த மேடையிலுமே பதட்டப்படவில்லை. ஆனால், இது சினிமாவில் எனக்கு முதல் மேடை. நான் முதல் குழந்தை பெற்ற போது பிரசவ வலி எப்படி இருந்ததோ அதேபோன்று ஒரு அனுபவம் இதில் கிடைக்கிறது.

ராஜலக்ஷ்மி அளித்த பேட்டி:

இந்த படத்தின் கதையை இயக்குனர் சொல்லிவிட்டு அதில் கதாநாயகியாக நான் நடிக்கிறேன் என்று சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. அதிலும் துப்பாக்கி வைத்த ஒரு பெண்ணாக என்னை கற்பனை கூட பண்ணி பார்க்க முடியவில்லை. இந்த படத்தில் நடிக்க மற்ற நடிகர்களுக்கு கூட இன்னொரு வாய்ப்பு வைத்திருக்கிறேன். ஆனால், இந்த கதாநாயகி கதாபாத்திரத்தில் உங்களைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை என்று கூறும் போது அவர் என் மீது வைத்த நம்பிக்கையை கண்டு நான் வியந்து போனேன். 32 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு நான் கதாநாயகியாக நடிக்கிறேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

Advertisement