ஒன்னில்ல ரெண்டில்ல ஹாலிவுட்டில் இருந்து மொத்தம் 35 சீன்களை சுட்டுள்ள ராஜமௌலி – ஆந்திரா அட்லீ என்று கேலி செய்யும் ரசிகர்கள்.

0
306
bahubali
- Advertisement -

ராஜமவுலியும் ஒரு தெலுங்கு அட்லீ என்று நெட்டிசன்கள் வெளுத்து வாங்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராஜமவுலி. இவர் தெலுங்கு மொழியில் தான் புகழ்பெற்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இவன் முதன் முதலாக ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தை தான் இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இருந்தாலும், இவரை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது மாவீரன் படம் தான். இந்த படத்தில் ராம்சரண், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து இவர் நான் ஈ என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. பின் இந்திய சினிமாவில் எத்தனையோ பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது பாகுபலி திரைப்படம் தான்.

- Advertisement -

பாகுபலி படம்:

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், நாஸர், சுதீப், தம்மனா, அனுஸ்கா, சத்யராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது.

RRR படம்:

இந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்று வசூல் சாதனையை படைந்தது. இதனை அடுத்து ராஜமவுலி
இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் RRR. இந்த படம் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியாகி இருந்தது. RRR – இரத்தம் ரணம் ரெளத்திரம் ஆகும். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

பாகுபலி படம் குறித்த விமர்சனம்:

மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் ராஜமவுலியின் பாகுபலி படம் பல ஹாலிவுட் படங்களிலிருந்து சுட்டது என்று விமர்சித்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, பாகுபலி திரைப்படத்தை பற்றிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

ராஜமௌலி கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

அதில் பாகுபலி படத்தின் பல காட்சிகள் ஹாலிவுட் படங்களிலிருந்து திருடப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்களுடன் வந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சுமார் 35 படங்களில் இருந்து பாகுபலி படத்தின் எடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும், புகழ்பெற்ற அவதார், கிங்காங், அவெஞ்சர்ஸ், பேட்மேன் வால்வரின் போன்ற படங்களில் இருந்து காட்சிகள் திருடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதை ஆதாரத்துடன் பதிவிட்ட நெட்டிசன்கள் ராஜமௌலியை, நீ ஒரு தெலுங்கு அட்லி என்றெல்லாம் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement