சூர்யாவின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட போகும் ராஜமௌலி.! ரசிகர்கள் குஷி.!

0
640
Surya

செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘என் ஜி கே ‘ படத்திற்கு பின்னர் தற்போது சூர்யாவின் சுரரை போற்று, காப்பான் போன்ற படங்கள் தயாராகி வருகிறது சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு வெளியிட்டு அறிவிப்பை பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி நாளை (ஜூன் 27) காலை 10.30 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : மனதை நொறுங்க செய்யும் ரேஸ்மா, அனைவரும் கண் கலங்கிவிட்டனர்.! 

- Advertisement -

இந்த படத்தில் பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு (special commando group )அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். 

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் இந்த டீசரில் வரும் காட்சிகளை ஒன்றுக்கு ஒன்று சேர்த்தை வைத்து கணக்கிட்டால், இந்தப் படம் ஒரு பொலிட்டிக்கல் த்ரிலர் என்பதில் சந்தேகம் இல்லை. த்ரிலர் என்றால் ஆக்‌ஷன் இருக்கும். அங்கே ரொமான்ஸ் கொஞ்சமே இருக்கும். ஆகவேதான் டீசரில் சூர்யாவிற்கு ரொமான்ஸ் காட்சிகளே காட்டப்படவில்லை. ஆக, அழுத்தமான ஆக்‌ஷன் ஹீரோவாக சூர்யாவை காட்சிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement