பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை இப்படி தான் இத்தனை நாளில் மணி சார் முடிச்சார்னு சொன்னதும் ராஜமௌலி Reaction – ஜெயம்ரவி ஷேரிங்.

0
422
jayamravi
- Advertisement -

மணிரத்னத்தை பார்த்து ராஜமவுலி வியந்து போய் எழுந்து நின்றார் என்று ஜெயம் ரவி அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் ஒரு நாளே இருக்கிறது. இயக்குனர் மணிரத்தினம் படைப்பில் தான் பொன்னியின் செல்வன் உருவாகி இருக்கிறது. மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : வனிதாவின் முன்னாள் காதலர், சிம்பு சர்ச்சை சீரியல் நடிகை, விவாகரத்தான விஜய் டிவி நடிகை – பிக் பாஸ் போட்டியாளர்கள் யார் யார் ?

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதோடு படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் படத்தை விளம்பரம் செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் உலகம் முழுவதும் சில தினங்களுக்கு முன்னே துவங்கியிருக்கிறது. அதோடு தமிழ் சினிமாவில் இதுவரை காணாத அளவிற்கு பொன்னியின் செல்வன் படத்திற்கு டிக்கெட் புக் செய்யப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

தற்போது சோசியல் மீடியா முழுவதுமே பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி தான் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் மணிரத்தினத்தை பார்த்து ராஜமௌலி வியந்து நின்றார் என்று ஜெயம் ரவி கூறி இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் கதையின் நாயகனாக அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ராஜமவுலி உடன் உரையாடிய விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.

ரவி அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருந்தது, பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இடம் நான் பேசும் போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை மணிரத்தினம் 150 நாட்களிலேயே எடுத்து முடித்தார் என்று சொன்னேன். இதைக் கேட்ட உடனே ராஜமௌலி நாற்காலியில் இருந்து எழுந்து நின்று மணிரத்தினத்திற்கு மரியாதை கொடுக்கும் விதமாக செய்தார். பின் அவர் இது எப்படி சாத்தியம்? பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற படங்களை எடுக்க எனக்கு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆனது. ஆனால், பொன்னியின் செல்வன் போன்ற மிகப்பெரிய நாவலை முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை 150 நாட்களில் எடுப்பது எப்படி சாத்தியம்? என்று வியப்புடன் கேட்டார்.

வியப்பில் ராஜமவுலி நிற்க காரணம்:

அதற்கு நான், பொன்னின் செல்வன் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்த போது ஒரு இடத்தில் காலை 6 மணிக்கு தண்ணீர் குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் தினமும் அங்கு சூட்டிங் நடக்கும். அதன் பின் 9 மணிக்கு தண்ணீர் அதிகமாகிவிடும். இதனால் வேறு ஒரு இடத்திற்கு மற்ற காட்சியினுடைய சூட்டிங் நடக்கும். இப்படி சரியான ஷெடுல் போட்டு மணிரத்தினம் படத்தை எடுத்தார். அது மட்டும் இல்லாமல் வானிலை அறிக்கை முன்பே தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல காட்சிகளையும் திட்டம் போட்டு எடுத்தார். இப்படித்தான் இவர் குறுகிய காலத்தில் இந்த படத்தை எடுக்க முடிந்தது என்று ஜெயம் ரவி கூறியிருந்தார்

Advertisement