ரன்பீர் கபூர் படத்தை ஒப்பிட்டு, தென்னிந்திய இயக்குனர்களை கேலி செய்த ராஜஸ்தானி meme கிரியேட்டர் – நம்ம பசங்க சும்மா இருப்பாங்களா ?

0
596
ranbir
- Advertisement -

பிரம்மாஸ்திரா படத்தின் ட்ரைலரை கிண்டல் கேலி செய்யும் நெட்டிசன்கள் மீம்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரன்வீர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது ரன்வீர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பிரம்மாஸ்திரா. இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஆலியா, அமிதாப் பச்சன், மௌனி ராய், நாகர்ஜுனா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரன் ஜோகர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்தது. ஆனால், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் வெளியீட்டை தாமதப்படுத்தி கொண்டே இருந்தது. மேலும், இந்த படம் மூன்று பாகங்களாக உருவாகும் என்று கூறப்பட்டு இருக்கிறது. ஆகையால், இப்படத்தின் முதல் பாகம் 2019ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள்.

இதையும் பாருங்க : இஸ்லாமியர் மீதான தாக்குதல் குறித்து பேசிய சாய் பல்லவி மீது போலீசில் புகார், குவியும் மிரட்டல்கள். குரல் கொடுத்த சிம்பு, தனுஷ் பட நடிகை.

- Advertisement -

பிரம்மாஸ்திரா ட்ரைலர்:

ஆனால், கிராபிக்ஸ் பணிகள் தாமதத்தால் இந்த படம் வெளியாகவில்லை. இந்த படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. அதில் அதிக VFX காட்சிகள் படத்தில் நிறைந்துள்ளன. வழக்கமான புராண சினிமா, சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட படம் என வசனங்கள் காண்பித்திருக்கிறார்கள். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

பிரம்மாஸ்திரா ட்ரைலர் குறித்த டீவ்ட்:

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியானதை தொடர்ந்து rajasthani memer 4.0 என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த முதல்வன் படத்தின் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தென்னிந்திய இயக்குனர்களின் பிரம்மாஸ்திரா ட்ரெய்லருக்கு ரியாக்சன் இது தான் என்று கிண்டல் செய்து பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலானது. இதை பார்த்த பலரும் பிரம்மாஸ்திரா படத்தை கேலி, கிண்டல் செய்திருக்கின்றனர்.

தென்னிந்திய சூப்பர் ஹிட் படங்கள்:

அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாகவே தென்னிந்திய சினிமா உலகில் வெளிவந்திருந்த பாகுபலி, கேஜிஎப், RRR, புஷ்பா போன்ற படங்களெல்லாம் இந்திய சினிமா அளவில் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்திருந்தது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கமலின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் தென்னிந்திய சினிமா ஒட்டுமொத்த இந்திய சினிமாவை ஆக்கிரமித்திருக்கிறது.

பிரம்மாஸ்திரா படத்தின் கிண்டல்:

அதுமட்டுமில்லாமல் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், யாஷ் போன்ற தென்னிந்திய நடிகர்கள் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் ஆக்கிரமித்து இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் பிரம்மாஸ்திரா டிரைலரை பார்த்து நெட்டிசன்கள் பலரும் கிண்டல் கேலி செய்து பதிவுகளை போட்டு வருகிறார்கள். தயவுசெய்து தென்னிந்திய சினிமாவை கம்பர் பண்ணாதீர்கள், இந்த படம் முழுக்க முழுக்க கார்ட்டூன் படம் பார்க்கும் மாதிரியே இருக்கிறது என்றெல்லாம் கிண்டல் செய்திருக்கிறார்கள். தற்போது பிரம்மாஸ்திரா ட்ரைலரின் கிண்டல் மீம்ஸ் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement