சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் கமிட் ஆகியுள்ளார் என்று உறுதியாகியுள்ளது.
இந்த படம் இந்திய அளவில் உள்ள அரசியல் பிரச்சினையை மையப்படுத்தியே இருக்கும் என்று பேசப்பட்டது. ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற முருகதாஸ் இந்த படம் கண்டிப்பாக சர்கார் போன்று அரசியல் சம்மந்தபட்ட கதையாக இருக்காது என்று விளக்கமளித்தார்.
மேலும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் முருகதாஸ் என்று கூறியிருந்தார். ஆனால், படத்தில் பணிபுரியும் கலைஞர்கள் பற்றி எந்த ஒரு தகவலையும் அவர் கூறவில்லை.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் மேலும், படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.