ரஜினி 166-ல் ஹீரோயின் இவர் தான்.! ரஜினியுடன் மூன்றாவதாக இணையப்போகும் நடிகை.!

0
1065
Rajini166
- Advertisement -

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் செய்திகள் நீண்ட நாட்களாக அடிபட்டு வரும் நிலையில் இன்னும் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது.  

-விளம்பரம்-

இந்த படம் இந்திய அளவில் உள்ள அரசியல் பிரச்சினையை மையப்படுத்தியே இருக்கும் என்று பேசப்பட்டது. ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற முருகதாஸ் இந்த படம் தனது முந்தய படமான ‘சர்கார்’ போன்று அரசியல் சம்மந்தபட்ட கதையாக இருக்காது என்று விளக்கமளித்தார். 

- Advertisement -

மேலும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் முருகதாஸ் என்று கூறியிருந்தார். ஆனால், படத்தில் பணிபுரியும் கலைஞர்கள் பற்றி எந்த ஒருதகவலையும் அவர் கூறவில்லை. 

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்ற நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. நயன்தாரா ஏற்கனவே ரஜினி நடித்த சந்திரமுகி, குசேலன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement